அந்தப் பெண்ணுக்கு நடுத்தர வயது. வாழ்வில் எதிலுமே பிடிப்பின்றி இருந்தார். வீடு முழுவதும் இருளடைந்து – தூசுபடிந்து கிடந்தது. அந்தப் பெண்ணின் ஒரே பற்றுக்கோடு, பக்கத்து வீட்டுக் குழந்தை. ஒருநாள் அந்தக் குழந்தை அழகிய ரோஜா ஒன்றைக் கொண்டு வந்து தந்தது. மிகவும் மகிழ்ந்த அந்தப் பெண், ரோஜாவை வைக்க பூ ஜாடியை எடுத்தார். அதன் தூசைத் துடைத்து மேசையில் வைத்தார்.
மேசை குப்பையாய் இருந்தது. மேசையைத் தூய்மை செய்தார். அந்த அறை இருளாய் இருப்பதை உணர்ந்து திரைச் சீலை விலக்கி விளக்கு பொருத்தினார். பிறகு வீட்டுக்கே வண்ணம் பூசினார். கலகலப்பு நிறைந்த மனிதராய் மாறினார். அன்புடன் கொடுக்கும் எதுவும் இந்த அபாரமான மாற்றத்தை ஏற்படுத்த வல்லது.
Leave a Reply