அந்தக் கடைக்குப் பெயரே அணையா விளக்குகளின் கடை. எப்போதும் விளக்குள் எரிந்துகொண்டே இருக்கும். நீடித்துழைக்கும் பல்புகளை எங்கே வாங்குகிறார்கள் என்றறிய ஆர்வம்கொண்டு ஒருவர் அணுகினார். விசாரித்தபோது விபரம் புரிந்தது. அவர்களும் எல்லோரும் பயன்படுத்தும் பல்புகளைத்தான் வாங்குகிறார்கள். ஒன்று
அணைந்தாலும் உடனே மாற்றுகிறார்கள். பல்புகளைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். உள்ளே இருக்கும் வெளிச்சத்திற்கும் இது பொருந்தும். நம் உற்சாகம் குறைந்தால் உடனே அதனை அதிகரிக்க வேண்டும். நம் உள்நிலையின் தன்மையை விடாமல் கண்காணிக்க வேண்டும்.
Leave a Reply