மாற்றி யோசியுங்கள்.. கண்டிப்பாக ஒவ்வொரு இடையூறு நேரங்களையும் சரி செய்ய சோம.வள்ளியப்பன் அவர்களின் காலம் உங்கள் காலடியில் கட்டுரை மாற்றி போடுவதற்கும், யோசிப்பதற்கும் தெளிவான தொடர். மாற்றி யோசித்தால் நல்ல
பலன்தானே! ஆகவே மாற்றி யோசிப்போம்!
தங்க. பரமேஸ்வரன், சின்ன கோசப்பாளையம்
நமது நம்பிக்கை இதழ் நமது நம்பிக்கையின் அடித்தளம். நவம்பர் இதழில் வெளியான “யார் வாழ்வையும் கெடுக்காத – யாராலும் கெடுக்க முடியாத வருமானமே நல்ல வருமானம்” என்று அறிவுப் பூர்வமாக விளக்கிய கட்டுரை மிகவும் அருமை.
ஏ. பிரம்மநாயகம், குனியமுத்தூர்.
நமது நம்பிக்கை இதழில் வெளியாகும் “மாணவர் பகுதி” மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்த பல வழிமுறைகளையும் இந்தப் பகுதியில் வெளியிட்டுள்ளமை மிகவும் அருமை.
அ. உஷா, ஊட்டி.
கான்ஃபிடன்ஸ் கார்னர் கலக்கலோ கலக்கல். மரபின்மைந்தன் முத்தையாவின் கடைசிப்பக்க கவிதையில் காற்றே சிறகாய் மாறிய அதிசயத்தை உணர்ந்தோம். தேநீர் சுவைக்க மட்டும்தான் என்றிருந்தோம், சாதிக்கவும்தான் என்று நாகூர்கனியின் மூலம் உணர்ந்தோம்.
கார்த்திக், பாப்பம்பட்டி.
முடிவெடுப்பதிலும் மந்திர சக்தி உண்டு என்பதை மகேஸ்வரியின் கட்டுரை மூலம் உணர்ந்தோம். ஆசிரியரின் மனது வைத்தால் மலையை நகர்த்தலாம் தொடரில் ‘சவாலான சூழல்களில் மனிதர்களின் மனம் மலையைத் தாண்டக் கூடிய சக்தியை பெறும்’ என்று கூறியுள்ளது எங்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
பிரகாஷ், சென்னை.
Leave a Reply