விருப்பங்கள் போதாது
– மணிவண்ணன் எல்லோருக்குமே விருப்பங்கள் உண்டு. மனம் விரும்பும் இடங்களுக்குப் போவதில் தொடங்கி, இன்னும் ஐந்தாண்டுகளில் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதுவரை நீங்கள் விசாரித்தால் எல்லோரிடமும் நிறைய விருப்பங்கள் இருப்பது தெரியவரும். விருப்பங்களை நீங்கள் பின்தொடர்கிறீர்களா என்பதை சின்னச் சின்ன விஷயங்களில் கூட சோதித்துப் பார்க்க முடியும்.