வாழச் சொல்லும் வாசகங்கள்

-தமிழருவி மணியன் ஒரு ஜென் துறவியும், அவருடைய சீடர்களும் ஓரிடத்திலிருந்து வேறிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து சென்ற வழியில் ஒரு முயல் மிக வேகமாகக் கடந்து சென்றது. அந்த முயலைத் துரத்தியபடி ஒரு நரி ஓடியது.