வெற்றி வெளிச்சம்
– இயகோகா சுப்பிரமணியம் இருளைத் தாண்ட உறவும் நட்பும் உதவும் -தொடர் தொழில், பணி, சேவை – இந்த மூன்றின் வெற்றிக்குமே அடிப்படையான ஒரு தேவை மனித உறவு. எல்லாரிடமும் நன்றாகப் பழக வேண்டும். இனிமையாகப் பேச வேண்டும் என்பது உறவு மேம்பாட்டுக்கான நல்வழி. ஆனால் தேவையான சிலரிடம் மட்டும் நல்ல முகத்தையும், இனிமையையும், பணிவையும் … Continued
உளிகள் நிறைந்த உலகமிது!
அறிமுகங்கள்! அனுபவங்கள்! ஆளுமைகள்!! – மரபின் மைந்தன் ம. முத்தையா உருவாக்கத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமை இருந்தால் போதாது என்பார் கணேஷ் பாலிகா. உருவானதை முன்வைப்பதிலும் அதே புதுமை அவசியம் என்று நினைப்பார். படைப்பாக முன்வைப்பு டழ்ங்ள்ங்ய்ற்ஹற்ண்ர்ய் என்பது. விளம்பர நிறுவனங்களைப் பொறுத்த வரை ஒரு பெரிய வைபவம். எனக்குத் தெரிந்து க்ளையண்ட்டின் இடத்திற்குப் போவதை விட … Continued
திருப்தி என்பது வளர்ச்சியைக் கெடுத்துவிடும்
நேர்காணல் -சோமவள்ளியப்பன் திரு. சோம. வள்ளியப்பன் பிரபல தன்முனைப்புப் பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர். மனிதவள மேம்பாட்டுத் துறையில் நாளும் புதுப்புது உத்திகளையும், வழிகாட்டுதல் களையும் பல்வேறு நிறுவனங்களுக்கும், தனி மனிதர்களுக்கும், குழுக்களுக்கும் வழங்குவதில் முன்னணியில் இருப்பவர். இன்று மிக அதிக அளவில் விற்பனையில் இருக்கும் சுயமுன்னேற்ற நூல்கள் பலவற்றின் ஆசிரியர்.
இன்று புதிதாய் பிறப்போம்
– ருக்மணி பன்னீர்செல்வம் பலமுறை பயன்படுத்தப்படும் இசைத்தட்டு எப்படியோ கீறல் விழுந்துவிடுகிறது. கீறல் விழுந்தபின்னர்தான் நீண்ட நாட்களாய் ஒன்றையே திரும்பப் திரும்பப் பயன் படுத்திக் கொண்டிருப்பதை நாம் உணர்கிறோம். பழமைகளை போற்றிப் புகழ்ந்துக் கொண்டிருப்பது நமது இயல்பு. அதில் தவறொன்றுமில்லை. புதுமையை நோக்கியும் நாம் பயணப் படுகின்றோம். ஆனால் பாதையின் துன்பங்களைக் கண்டதும் பாதிவழியிலே பலர் … Continued
அன்று இன்று
அவர் பெயர் கான்க்ஷா. 1910ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26ஆம் தேதி பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் குடும்பத்தில் மிகவும் இளையவர். இவர் தந்தை நிக்கோலா ஒரு காண்ட்ராக்டர். அரசியலில் மிகுந்த தீவிரத்தோடு பங்கு கொண்டிருந்தார். கான்க்ஷாவிற்கு 8 வயதாக இருந்தபோது இவர் தந்தை இறந்தார். அன்று முதல் கான்க்ஷாவையும் அவருடன் பிறந்த மற்ற இரண்டு … Continued
பத்து நிமிடத்தில் வெற்றி
– அனுராஜன் வெற்றிக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. எப்போது கிடைக்கும் அல்லது எப்போது தவறவிடுகிறோம் என்பதும் தெரியாது. ஆனால் குறித்த நேரத்தில் வெற்றி கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி நேரம் குறித்து வெற்றி பெறுகிற ஒரு நிறுவனத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கிடைக்கும் என்கிற போர்டை பார்க்கும் … Continued
மனமே உலகின் முதல் கணினி
– தமிழில் கனகதூரிகா என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன் எழுதும் புதுமைத் தொடர் பார்த்தல், கேட்டல், உணர்தல் இந்த மூன்றும்தான் நம் மனம் உள்வாங்கி கொள்கிற செய்திகளின் அடித்தளம். இந்த மூன்றையும் அடிப்படையாய் கொண்டு செய்திகள் தொகுக்கப் பட்ட அடுத்த நொடியே மனம் அதை சேகரிக்கத் துவங்குகிறது. சேகரிக்கத் துவங்கிய அடுத்த தருணமே மனம் அதை … Continued
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
சாதிக்க வாய்ப்புகள் எக்கச்சக்கம் – சினேகலதா – தொடர் விழிப்புணர்வுடன் கூடிய துணிச்சலுக்கே விவேகம் என்று பெயர். மார்க்கெட்டிங் துறையில் இந்தக் கலவை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வெற்றி இருக்கிறது. மார்க்கெட்டிங் உலகின் வினோதமான உண்மை என்னவெனில் ஒரு வட்டாரத்தில் வெகு பிரபலமாக இருக்கும் பெயர் வேறொரு வட்டாரத்தில் அறிமுக நிலையில் மட்டுமே இருக்கும். தான் … Continued
நமது பார்வை
உங்கள் வாழ்வில் உள்ளாட்சி உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கும் நேரமிது. ஊக்கத்துடன் வாழ்வை நிகழ்த்த விரும்பும் நமக்கும் உள்ளாட்சி குறித்த புதிய விழிப்புணர்வு தேவை. உள்ளாட்சி என்றால் ஊர்நிலையில் அல்ல. உள்நிலையில் நிகழும் உள்ளாட்சி. ஒரு மனிதர் தன் உடல் நலனை நிர்வகிப்பதும், உள்ள உணர்வுகளை ஒழுங்கு செய்வதும், மூச்சுப்பயிற்சி, யோகப்பயிற்சி தியானம் மூலம் உள்நிலையில் … Continued
கான்பிடன்ஸ் கார்னர் – 6
சூரியனை உன்னிப்பாக கவனித்துவிட்டு ஆளாளுக்கு அறிக்கை கொடுங்கள் என்றார் ஒரு பயிற்சியாளர். பெரும்பாலானவர்கள், சூரியனைப் பார்த்தால் கண்கூசுகிறதென்று ஒதுங்கி விட்டார்கள். பிறகு பயிற்சியாளரே சொன்னார்.”சூரியன் ஒளிமிக்கதாய் இருக்கிறது. அதனை கிரகங்கள் சுற்றுகின்றன. நீ ஒளி மிக்கவனாய் இருந்தால் உன்னை எல்லோரும் சுற்றிக்கொள்வார்கள்.