திசைகளை திரும்பிப் பார்க்கிறேன்
– சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அன்று இரவு முழுவதும் நான் கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருந்தேன். எனது கண்கள் தூக்கத்தை விவாக ரத்து செய்து விட்டது. மனதிற்குள் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது விழிகளை மூடி எப்படி உறங்க முடியும்? எங்கள் வீடு, ஊருக்கு வடக்கில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. … Continued
தலைவராக தயாராகுங்கள்
– அத்வைத் சதானந்த் கிருஷ்ணதேவராயர் அரண்மனை மாடத்தில் நின்றுகொண்டிருந்தார். அவருடன் இருந்த தேரோட்டி தயங்கித்தயங்கி கேட்டான், “தெனாலிராமனும் மற்ற மந்திரிகள் போலத் தானே அவருக்கு மட்டும் ஏன் அதிக முக்கியத் துவம் கொடுக்கிறீர்கள்?” ராமன்மேல் பலரும் பொறாமை கொண்டிருந்தனர். அவர்களில் தேரோட்டியும் ஒருவன் என்பது தெரிந்ததால் கிருஷ்ணதேவராயர் எதுவும் பேசாமல் தனக்குள் சிரித்துக்கொண்டார். தூரத்தில் சென்று … Continued
இருப்பதை உணர்வோம்
வழக்கறிஞர் த, இராமலிங்கம் தனக்குள்ளே ஆற்றல் இல்லாதவர் என்று ஒருவருமே இல்லை. எந்த ஒரு மனித படைப்பும் வீணான படைப்பு இல்லை. நாம் நம்முடைய பலவீனங்களை மிக பலமாகவும், பலத்தை மிக பலவீனமாகவும் பிடித்திருக்கிறோம். ‘இழக்கும்வரை நம்மிடம் இருப்பதன் அருமை நமக்குத் தெரிவதில்லை’ என்று பொதுவாக நாம் அனைவருமே பேசிக் கொள்கிறோம். ஒன்றின் முக்கியத்துவத்தை உணராமல், … Continued
என் குரல் எல்லோருக்கும் கேட்பதில்லை
– ரிஷபாருடன் மிஸ்டர் மனசாட்சியுடன் பரபரப்பு நேர்காணல் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற குழப்பத்திற்கு அடுத்தபடியான குபீர் குழப்பம், மனசாட்சி என்று ஒன்று உண்டா இல்லையா என்பதுதான். இருபத்தோராம் நூற்றாண்டின் அதிரடி தலைமுறைக்கு அறிமுகமாக வேண்டிய சுவாஸ்ரயமான மனிதர், மிஸ்டர் மனசாட்சி. பெரும்பாலும் தலைமறைவாய் இருப்பதையே விரும்புகின்ற இவர், வெற்றியாளர்களுக்கு வழிகாட்டி என்பது மட்டும் நிச்சயம். … Continued
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
மரபின் மைந்தன் ம. முத்தையா மனம் எனும் மாயக்கம்பளம் குழந்தைப் பருவத்தில் சொல்லப்படும் மிகப்பல கதைகளில் முக்கியமானது மாயக் கம்பளம். மனதில் ஓர் இடத்தை நினைத்தால் மறுவிநாடியே அங்கே கொண்டு போய் சேர்க்கக்கூடிய மாயக்கம்பளம் அந்தக் காலக் குழந்தைகள் மனதில் அடிக்கடி வந்து போகும். காலையில் கண்விழித்துப் பார்த்தால் படுக்கையில் இருப்பது தெரிய வந்து, பக்கத்தில் … Continued
பகிர்ந்து கொள்ளுங்கள் பகிரங்கமாக
– பிரதாபன் நிர்வாகவியல் நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜாக் வெல்க். நிறுவங்களின் வளர்ச்சிக்கான நடைமுறை வழிகளைப் ‘பளிச்’சென்று சொல்வதில் வல்லவர். செயல்படுத்தக்கூடிய சூத்திரங்கள் பலவற்றைத் தந்துள்ள அவரின் புகழ்பெற்ற வழிகாட்டுதல்களில் சில: 1.வெற்றிக்கு இருப்பது ஒரே வழி. அதுதான் நேர்வழி. உங்கள் நிறுவனத்தின் வழிமுறைகள் நேராக, நேர்மையாக அமையட்டும்.
வெற்றி வாசல் 2010
மனநல மருத்துவர் டாக்டர் குமாரபாபு இன்றைய விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துள்ள நிலையில் மூளையின் செயல்பாடு பற்றிய மர்மத்தை இன்றுவரை 5%வரைகூட அறிய முடியவில்லை. அமெரிக்காவில் டுவின் டவர் விபத்து நடந்த பின் அமெரிக்க அரசு கோடிக்கான பணத்தை மூளை பற்றி ஆராய்ச்சிக்கு ஒதுக்கியுள்ளது. என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களோடு கலந்து வெளிவராத பல ஆய்வு கருத்துக்களை … Continued
இடைவெளியை நிரப்புங்கள்
– மகேஸ்வரி சற்குரு ”நான் எப்படியாவது பெரிய ஆளாக மாறிடணும்.” ”நான் மட்டும் மனசு வைச்சா?!” ஒவ்வொரு மனிதனுக்கும் தோன்றுகின்ற நினைப்பு இதுதான். அது சரிதான். எப்படியும் பெரிய ஆளாக மாறிடலாம். ‘எப்படி?’ என்பதில் இருக்கிறது வெற்றி! மனதில் பளிச்சிடுகின்ற இலக்குகள்மீது நாம் பயணிக்கின்ற போது கிடைக்கின்ற சுகம் தனியான, தணியாத சுகம். ”அவதார்” ஆங்கிலப்படத்தின் … Continued
கனவுகளை துறப்பதா பொறுப்புடன் இருப்பது?
– வினயா உங்கள் சட்டையை நீங்களே பிடித்து உலுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறதா? அப்படி யானால் உங்களுக்குள் உண்மையின் குரல் ஒலிக்கத் தொடங்கி விட்டதாக அர்த்தம். ஆயிரம் ஆயிரம் கனவுகளை ஆழ்மனம் அடைகாத்தது. உங்கள் இளமைப்பருவம் தொட்டு அந்தக் கனவுகள், முட்டைக்குள் இருக்கும் உயிர் போல முட்டி மோதிக் கொண்டிருந்தன.
தருவதையே பெறுகிறீர்கள்
வெற்றி வாசல் நிகழ்ச்சியில் நகைச்சுவைத்தென்றல் முனைவர் கு. ஞானசம்பந்தன் எங்கள் ஊர் சோழவந்தானில் பல மேடைப்பேச்சுகளை கேட்கும்போது நானும் ஒரு மேடைப் பேச்சாளராக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது. ஒருநாள் இந்த மேடை என் வசப் பட வேண்டும் என எண்ணினேன். வசப்பட வேண்டும் என்பதற்காக உழைத்தேன். எங்கள் ஊர் திரையரங்குகளில் மண்தரையில் அமர்ந்து … Continued