விருப்பங்கள் போதாது
– மணிவண்ணன் எல்லோருக்குமே விருப்பங்கள் உண்டு. மனம் விரும்பும் இடங்களுக்குப் போவதில் தொடங்கி, இன்னும் ஐந்தாண்டுகளில் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதுவரை நீங்கள் விசாரித்தால் எல்லோரிடமும் நிறைய விருப்பங்கள் இருப்பது தெரியவரும். விருப்பங்களை நீங்கள் பின்தொடர்கிறீர்களா என்பதை சின்னச் சின்ன விஷயங்களில் கூட சோதித்துப் பார்க்க முடியும்.
சாதனைச் சதுரங்கம்
– தேவகோட்டை ம.திருவள்ளுவர் அணியணியாய் இணைய உதவும் அழகிய சதுரங்கம் நான்காவது சதுரம் நம்மைப் பிணைக்கும் சதுரம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுதலின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் ஒற்றுமைச் சதுரம்.
சலிப்பாய் இருக்கிறதா?
செயல்திறனை சீர்குலைய வைப்பது சலிப்பு. செய்வதற்கு என்று வேலை நேரம் – செய்ய வேண்டிய தேவை எல்லாம் இருந்தும்கூட தள்ளிப் போடச் சொல்லும் உணர்வுக்கு சலிப்பு என்று பெயர். இந்தச் சலிப்பை வளர விடுவதில் இரண்டு விதமான சிரமங்கள் இருக்கின்றன. ஒன்று செய்ய வேண்டிய வேலை தள்ளிப் போகும். சலிப்பின் பெயரால் சோம்பலும் அதன் தொடர்ச்சியாய் … Continued
வெற்றி வேண்டுமா வழிகள் இதோ!!
-மரபின் மைந்தன் ம. முத்தையா எதைச் செய்தாலும் வெற்றிக்காகவே செய்கிறோம். ஆனால், எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் வெற்றியும் தோல்வியும். செய்கிற வேலைகளும் தொழில்களும் வேறுபடலாம். பொதுவானதாக இருப்பது அணுகுமுறையும், நம்மை ஆயத்தம் செய்து கொள்கிற விதங்களும்தான். அவற்றில் கவனம் செலுத்துகிறபோது வெற்றிக்கான விதை விழுகிறது.
நமது பார்வை
சவால் என்னும் சிறந்த வாய்ப்பு தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நிதிநிலையிலும் உலகந்தழுவிய நிலையில் ஏற்படும் பின்னடைவுகளின் பொழுதுகளில், இந்தக் கல்வியாண்டின் நிறைவை நோக்கி நகர்கிற இலட்சக்கணக்கான மாணவர்களின் இதயங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
கான்ஃபிடன்ஸ்கார்னர் -6
அந்த மனிதருக்கு நண்பர்கள் உண்டு. ஆனால் அவர்கள் சொல்வதை அவர் கேட்பதில்லை. புதிதாக வீடு கட்டியிருந்தார். புதுமனை புகுவிழாவிற்கு நண்பர்களை அழைத்திருந்தார். எல்லா நண்பர்களுமே அந்த மனிதரின் அழகிய புகைப்படம் ஒன்றை பெரிதாக்கி சட்டமிட்டு அன்பளிப்பாக ஆளுக்கொன்றை அளித்தார்கள். காரணம் கேட்ட போது நண்பர்கள் சொன்னார்கள், “உனக்கு நிலைக்கண்ணாடியைப் பரிசளிக்க
கான்ஃபிடன்ஸ்கார்னர் -5
யார் பிச்சைக்காரன் என்பதில் ஓர் அறிஞர் தீர்ப்புச் சொல்ல வேண்டியிருந்தது. அவர் தெளிவாகச் சொன்னார். “பிச்சை எடுப்பவனை எல்லாம் பிச்சைக்காரன் என்று சொல்ல முடியாது. சராசரியான பிச்சைக்காரன் ஒருவனின் வாழ்க்கையை முதலில் பாருங்கள். மூன்று அம்சங்கள் தெரியும். முதலாவதாக, எது நடக்க வேண்டும் என்பது அவன்
கான்ஃபிடன்ஸ்கார்னர் -4
அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள் இணைந்தே திரியும். பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும். நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது. கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை. இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார்.
கான்ஃபிடன்ஸ்கார்னர் -3
கல்லுடைக்கும் வேலை அவனுக்கு. ஒரு வணிகரின் மாளிகையைக் கடந்து போகும் போதெல்லாம் பெருமூச்சு விடுவான். “நானும் வணிகனாய் இருந்தால் வசதியாய் வாழலாமே”. கொஞ்ச நாட்களில் வணிகன் ஆனான். ஓர் அதிகாரியைக் கண்டால் வணிகர்கள் பயந்தார்கள். அதிகாரி ஆக நினைத்தான். ஆகி விட்டான்.
கான்ஃபிடன்ஸ்கார்னர் -2
கிரேக்க நாட்டில் ஒரு கதையுண்டு. சிஸிபஸ் என்ற ஒருவனை, மலைக்கு மேல் ஒரு கல்லைக் கீழிருந்து உருட்டிச் செல்லுமாறு ஒரு தேவதை பணித்தது. கடனே என்று சிஸிபஸ் உருட்டிச் செல்வான். உச்சிக்குப் போனதும் அந்தக் கல் உருண்டு கீழே வந்துவிடும். இது தொடர்ந்தது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு சிஸிபஸ் ஒரு விழிப்புணர்வைப் பெற்றான்.