உன் பெயர் பதித்திடு!
-மரபின்மைந்தன் ம. முத்தையா காகிதம் போன்றது நம் மனம் காவியம் கூட எழுதலாம் ஓவியத் தூரிகை நம் மனம் உயிரோவியமே வரையலாம்
நமக்குள்ளே
“ஓர் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்” என்பதை “யாரோ போட்ட பாதை” தொடர் காரண – காரியங்களோடு விளக்குவது புருவங்களை விரிய வைப்பதோடு நில்லாமல் நம்மளையும் முயற்சி செய்ய களம் அமைத்து கொடுக்கிறது. – கே.எல். கந்தரூபி, மேலகிருஷ்ணபுதூர்.
காலம் உங்கள் காலடியில்
தொடர் – 8 -சோம.வள்ளியப்பன் நேர மேலாண்மை ரகசியம் அது ஒரு மருத்துவரின் கிளினிக். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கே போயிருக்கிறேன். அதே தெரு. அதே கட்டிடம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு அதிக வேறுபாடு இல்லாததால் சுலபமாக கண்டுபிடித்தேன். ஆனால், வராண்டா தாண்டி உள்ளே போனதும் கண்ணில் பட்ட இடம் மிகவும் புதியதாக இருந்தது. பிரமிப்பு … Continued
எட் ஃபோர்மென் சொல்லும் எட்டு வழிகள்
வெற்றி என்பது எப்போதோ ஏற்படும் ஒன்றாயிருந்தால் போதாது. தொடர்ந்து நடப்பதாய் இருக்க வேண்டும். அத்தகைய வெற்றிக்கு வாழ்வை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் எட்டு வழிகளை வழங்குகிறார் எட் ஃபோர்மென்.
செங்கோல்: இதனை இதனால்
– இரா.கோபிநாத் தொடர் – 23 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அழ்னை அவன்கண் விடல் -என்றார் வள்ளுவர். ஏன் சார், நானே செய்து முடித்து விட்டால்? எனக்கே எல்லா நல்ல பெயரும் கிடைக்குமே? நான் வேகமாக முன்னேற முடியுமே?
யாரோ போட்ட பாதை : எதையும் சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்!
– தி.க. சந்திரசேகரன் “வாழ்க்கை உங்களுக்கு என்ன கொண்டுவந்து சேர்க்கிறது என்பதைவிட, வாழ்க்கைக்கு என்ன மனப்பான்மையை நீங்கள் கொண்டு வந்து சேர்க்கிறீர்கள் என்பதும்; வாழ்க்கையில் என்ன நேரிடுகிறது என்பதைவிட, ஏதோ ஒன்று நிகழும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதுமே உங்கள் வாழ்க்கையின் பொருளைத் தீர்மானிக்கிறது”.
வல்லமை தாராயோ!
நமது நம்பிக்கை மாத இதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் “வல்லமை தாராயோ” தொடர் நிகழ்ச்சி, திருச்சியில் 21.09.08 அன்று நடைபெற்றது. அதில் பேராசிரியர் முனைவர் த. ராஜாராம் எழுச்சியுரை ஆற்றினார். அவர் உரையிலிருந்து சில பகுதிகள். “தன் மனைவியிடமிருந்துகூட தனக்கான அங்கீகாரம் கிடைக்கிற நிலையிலும், பாரதி, “எத்தனை கோடி இன்பம் வைத்தாய். … Continued
மற்றவர்களை மன்னியுங்கள் உங்களுக்காக!
– சிநேகலதா தவறு செய்பவர்களையும், துரோகம் செய்பவர்களையும் நாம் மன்னிக்கிறபோது அவர்களுக்கு நன்மை நிகழ்கிறது என்றுதான் பொதுவாக என்ணுகிறோம். ஆனால், உண்மையில், மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மை அடைகிறார்கள். மற்றவர்களை மன்னிக்கும்போது நமக்கு என்னென்ன நன்மைகள் நிகழ்கின்றன என்று பார்ப்போமா?
கல்லிலே கலைவண்ணம் வெற்றியின் பன்முகங்கள்
இந்திய தொழில் வர்த்தக சபை கோவையில் நடத்திய சேம்பர் ஷோ 2008 நிகழ்ச்சியில் ஜெம் நிறுவனங்களின் தலைவர் திரு.ஆர் வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து… நீங்கள் நினைத்ததை, முயற்சித்ததை, உழைத்ததை, நீங்கள் திட்டமிட்டதை, சரியான முறையில் எதிர்பார்த்த பலன் கிடைத்து, அதன்மூலம் உங்களுக்கு வருமானமும் கிடைத்தால் அது வெற்றி.
சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்
– சிவக்குமார் ராஃபோர்ட் என்கிற நகரம், அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி மாநிலத்தில் உள்ளது. அங்கே வளர்ந்துவந்த இளைஞனின் தந்தை, கட்டிடங்கள் கட்டுவதற்கு செங்கல் சுமக்கும் கூலியாளாக வேலைபார்த்தார். விடுமுறைக் காலங்களில் அப்பாவுக்கு உதவியாய் இந்த இளைஞனும் போவான். கனவுகள் சுமக்கும் கல்லூரி மாணவனுக்கு செங்கல் சுமப்பதொன்றும் சந்தோஷமான வேலையல்ல.