பிரபலங்களின் நம்பிக்கை நொடிகள்

– கனகலஷ்மி இந்த மாதம் பாரதிகிருஷ்ணன் (இன்று புகழின் உச்சியைத் தொட்டவர்களும் தங்களுக்கான நம்பிக்கையை எங்கிருந்தோ பெற்றிருப்பார்கள். அந்த அனுபவங்கள் குறித்து உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன் உரையாடுகிறார்கள் பிரபலங்கள்) அம்மாவின் மரணத்திற்குப் பிறகு அப்பாவுக்கும் எனக்கும் இடையில், ஒரு பெரிய சுவர் எழும்பி இருந்தது. யாரோடும் சேர்ந்து இருக்காமல், மதுரை வீட்டில் தனியே இருந்தார் அப்பா. … Continued

திசைகளை திரும்பிப் பார்க்கிறேன்

தேர்தலில் அமோக வெற்றி – சிந்தனைக் கவிஞர் கவிதாசன் முடியாது என்று முடங்கிவிட்டால் மூச்சுக் காற்றும் நின்றுவிடும் முடியும் என்று துணிந்து விட்டால் மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும் தமிழ்மன்றத் தேர்தலில் நான் அமோக வெற்றி பெற்று தமிழ்மன்றச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட அறிவியல் துறையைச் சார்ந்த ரவிச்சந்திரனைவிட 800 ஓட்டுக்கள் அதிகம் பெற்றிருந்தேன்.

சந்திப்புகளில் சாதிக்கலாமே..!

– பிரதாபன் எந்தத்துறையிலும் ஏற்றங் களைக் காண்பதற்கான ஏற்பாடுகள், சந்திப்புகள், சந்திப்புகளை சரியாகப் பயன் படுத்தினால், எதிரில் உள்ள மனிதரே உங்கள் ஏணியாக மாற வாய்ப்பி ருக்கிறது. ஒவ்வொரு மனிதரையும் உங்களுக்கு உதவக்கூடியவராய் மாற்றுவது உங்களிடம்தான் இருக்கிறது. முக்கியமாக, உங்கள் அணுகுமுறையில் இருக்கிறது. விநாடிகளில் விளங்கி விடும்: ஒரு மனிதரை எடை போடுவதற்கு நிறைய நேரம் … Continued

அன்று சொன்னவை..! அர்த்தமுள்ளவை!!

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் தொலைக்காட்சி ஒன்றில், நகைச்சுவை நடிகர் ஒருவர், ஒரு துணுக்கினைச் சொல்லிவிட்டு, அவரே சிரித்துக் கொண்டிருந்தார். தற்செயலாக அதைப் பார்க்க நேரிட்டபோது, நகைச்சுவையை விட, ஆழமான ஒரு செய்தி அந்தத் துணுக்குக்குள் மறைந்திருப்பதாகவும், அது நகைச்சுவை என்னும் நீரில் கரைந்து போவதாகவும் பட்டது. அதை நம் பார்வையில் பார்க்கலாம். கணவன், மனைவி … Continued

படம் சொல்லும் பாடம்

எந்த திசையில் பறந்தாலும் பிடிக்க முயன்றால்.. கனவுகளை கைவிட தேவையேயில்லை. இலக்கின் மீதான பார்வை விலகுகிற போது தான் தடைகள் தெளிவாக தெரிகின்றன.

அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா கனவுகளால் ஆனதுதான் அந்த மனிதனின் வாழ்க்கை. ஆனால் மிகுந்த தீவிரத்தோடும் தெளிவோடும் அந்தக் கனவுகளை அவர் எட்டிப் பிடித்ததால் அவை இலட்சியங் களாயின.” இப்படி வர்ணிக்கப்பட்டவர், வால்ட் டிஸ்னி. குழந்தைகள் உலகின் கற்பனைப் பாத்திரங்களை படைத்துக் கொடுத்த பிரம்மா. அவரே ஒரு முறை சொன்னார். “உண்மையான படைப்பாற்றல் கனவு … Continued

ஆபத்திலும் சோகத்திலும் கூட…

– சோம. வள்ளியப்பன் ‘உங்களுக்குள் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால் போதும். சொல்லித் தருவதற்கு எல்லா இடத்திலும் எந்நேரமும் ஆசிரியர்கள் தோன்றுவார்கள்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. மார்ச் மாதம் 11ம் தேதி. மதியம் 2.46 மணி. ஜப்பானின் மேற்காக, பசிபிக் மகாசமுத்திரத்தில், கடலுக்கு அடியில் 34 கி.மீ ஆழத்தில், சுமார் ஆறு நிமிடங்கள் வரை … Continued

கல்யாணப் பரிசு

யுத்தம் செய்யாத தம்பதிகள் – கிருஷ்ண வரதராஜன் உலகிலேயே அதிக சண்டைகள் நடக்கும் இடம் எது? ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, இஸ்ரேல் என்று பட்டியலிட்டு விடாதீர்கள். ஏனெனில் உலகிலேயே அதிக சண்டைகள் நடக்கும் இடம் வீடுதான். இங்கே வார்த்தைகள்தான் ஆயுதங்கள். சில பேர் காயப்படுத்துவதற்காக, வார்த்தைகளை ஆயுதங்களாக பயன்படுத்துவார்கள். சிலர் தன்னை தற்காத்துக்கொள்வதற்காக வார்த்தை ஆயுதத்தை கையில் … Continued

புது வாசல்

நம்பிக்கை மேல் நம்பிக்கை ஒரு நாட்டின் அரசருக்கு, அவரது ஒற்றன் ஒரு அவசர செய்தியை கொண்டு வந்திருந்தான். “தலைமை மருத்துவர் தங்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுவந்து கொண்டிருக்கும் மருந்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது.” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே அரண்மனை வைத்தியர் வந்துவிட்டார். ஒற்றன் கண் ஜாடை காட்டினான், ‘அரசே இம்மருந்தை சாப்பிடவேண்டாம் இதில்தான் விஷம் கலந்திருக்கிறது.’

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

கடுமையான பாலைவனத்தில் முகாமிட்டிருந்தார் அந்த ராணுவவீரர். அவருடைய மனைவியும் உடன் சென்றிருந்தார். தகிக்கும் வெய்யிலையும் எங்கும் வீசியடிக்கும் அனலையும் மணலையும் அவரால் தாங்க முடியவில்லை. தன் தந்தைக்குக் கடிதம் எழுதினார். அவர் தந்தை பதிலெழுதினார்.