எது என் பாதை
– பதினென் கவனகர் கனக சுப்புரத்தினம் ஆரம்பகாலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் வகுப்புகளில் நான் உற்சாகமாக பாடம் நடத்துவதையறிந்த எங்கள் பள்ளி நிர்வாகி, பள்ளி விழாவில், “நேருவைப் பற்றி பேச வேண்டும்” என்றார். மேடைப் பேச்சில் எனக்கு அனுபவம் இல்லையென்பதால் தயங்கியபடி, சரி என்றேன். விழா நாளும் வந்தது. என் பேச்சிற்கு மாணவர்கள் மத்தியில் பயங்கர … Continued
மார்க்கெட்டிங் மந்திரங்கள்
-சிநேக லதா வாய்ப்புகளின் வாசல் ரக்கு மாஸ்டரும் சப்ளையரும் சம்பந்தம் செய்த கதை உங்களுக்குத் தெரியுமா? சரக்கு மாஸ்டர் பெண்ணை யாருக்குக் கட்டி வைக்கலாம் என்று கேள்வி வந்தபோது, தான் பணிபுரியும் உணவகத்திலுள்ள சப்ளையருக்குத்தான் கல்யாணம் செய்துகொடுக்க வேண்டும் என சரக்கு மாஸ்டர் ஒற்றைக்காலில் நின்றாராம்.
திசைகளை திரும்பிப் பார்க்கிறேன்
– சிந்தனை கவிஞர் கவிதாசன் “நண்பர்கள் நம்மைப் பறக்க வைக்கிறார்கள்; வீழும் போதெல்லாம் தாங்கி நிற்கிறார்கள்” “எனக்குப் புனைபெயர் சூட்டுவதில் நண்பர்கள் தீவிரமாக இருந்தார்கள். பலரும் பல பெயர்களை முன்மொழிந்த நிலையில் “கவிதா” என்று புனைபெயர் இறுதியாக தேர்வானது. அதை நானும் ஏற்றுக் கொண்டு “கவிதா” என்ற புனைபெயரில் எழுதலாம் எனத் தீர்மானித்தேன். அப்பெயர் எனக்கு … Continued
வீட்டிலேயே சம்மர் கேம்ப்
– கிருஷ்ண வரதராஜன் தந்திரா ஹாலிடே ஸ்கூலின் சென்னை சம்மர் கேம்பில் தன் குழந்தையை சேர்க்க வந்திருந்த ஒரு பெண்மணி கேட்டார், “கேம்ப் அரை நாள்தானா ஃபுல்டே கிடையாதா? இவங்கள வீட்டுல வைச்சு மேய்க்க முடியல?” ‘மேய்ப்பதற்கு குழந்தைகள் என்ன ஆடா? மாடா?’ பெற்றோர்களையும் குறைசொல்ல முடியாது. எக்ஸாம் முடிந்து லீவு விட்டால் தங்களை சுதந்திரப்பறவைகளாகத்தான் … Continued
நமக்குள்ளே
ரிஷபாரூடன் அவர்கள் மிஸ்டர்.மனசாட்சியுடன் நடத்திய நேர்காணல் வெகு அருமை. தேர்ந்தெடுத்த கேள்விகள், தெளிவான பதில்கள் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் சந்தேகங்களை கையாண்ட விதம் அருமை. அரசியல் பற்றிய கேள்வியும் அதற்கான பதிலும் அற்புதம். டாக்டர் குமாரபாபு இலக்குகளை தீர்மானிக்கவும், இலக்குகளை அடைய நாம் செய்யவேண்டிய பயிற்சி பற்றியும் மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்.
கான்பிடன்ஸ் கார்னர் – 6
நல்லவனாக வாழ்வதில் பலருக்கும் நாட்டம் குறைந்துவிட்டதே, அப்படியானால் நல்ல இயல்புகளுக்கு மதிப்பு குறைந்துவிட்டதா என்று கேட்டான் மாணவன். ஆசிரியர் சொன்னார், ”இல்லை! நல்ல அம்சங்களின் மதிப்பு கூடிவிட்டது. அரிதாகக் கிடைக்கிறதங்கத்தை தேடி வாங்குவது போல் நல்ல குணங்களை நாடிப்போக வேண்டிய வர்கள் மனிதர்கள்தான்” என்று.
கான்பிடன்ஸ் கார்னர் – 5
சொத்தைப் பிரித்துக்கொள்வதில் அந்த சகோதரர் களிடம் விசித்திரமான சண்டை வந்தது. தம்பிக்குத் தான் அதிக சொத்து சேரவேண்டுமென அண்ணன் வாதாடினார். அண்ணனுக்குத்தான் அதிக சொத்து தர வேண்டுமென்று தம்பி வாதாடினார். தம்பி சொன்ன காரணம், ”இளமையில் நாங்கள் வறுமையில் இருந்தபோது ஆளுக்கு நான்கு ரொட்டித்துண்டுகள் கிடைக்கும்.
கான்பிடன்ஸ் கார்னர் – 4
”இருபது வயது வரை என் அம்மா என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். அவர் முதுமையடைந்தவுடன் அவர் மரணம் வரை இருபது ஆண்டுகள் நான் அதை விட நான் நன்றாகப் பார்த்துக் கொண்டேன். கணக்கு நேராகி விட்டதல்லவா” என்று நபிகள் நாயகத்திடம் ஒருவர் கேட்டார். நபிகள் சொன்னார், ”கணக்கு நேராகாது. உன் அம்மா உன்னை வளர்த்தது, உன்னை
கான்பிடன்ஸ் கார்னர் – 3
பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்த கூட்டத்தில், ஒரு மனிதனின் வெற்றி எதிலிருக்கிறது என்று கேட்டார் அந்த ஞானி. ”படிப்பில்” என்றார்கள் சிலர். ”பெறும் விருதுகளில்” என்றனர் சிலர். ”சேர்த்த சொத்தில்” என்றனர் சிலர். ”செய்கிற நல்ல காரியங்களில்” என்றனர் சிலர். இல்லை யென்று மறுத்த ஞானி சொன்னார், ”பெறுகிற
கான்பிடன்ஸ் கார்னர் – 2
சிறுவனாய் இருந்தபோது தன்னை மிகவும் துன்புறுத்திய தந்தை முதுமை அடைந்தார். நடுத்தர வயதை எட்டிய மகன் சொன்னார், ”அப்பா! நீங்கள் இறந்து போனால் நான் வருத்தப் படுவேனோ இல்லையா என்று தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் இறந்து போகும்வரை வருத்தப் படாமல் இருப்பீர்கள்