உந்தி எழு உயரப் பற
– பேராசிரியர் பர்வீன் சுல்தானா உந்தி எழு; உயரப்பற என்கின்ற தலைப்பை நான் வித்தியாசமாக உணர்கிறேன். ஒன்று, நமக்குள் ஒரு சக்தி இருக்கின்றது. இரண்டாவது, நாம் அடைய வேண்டிய இலக்கு, நமக்கு முன்னால் இருக்கின்ற சாத்தியக் கூறுகள் என நான் இந்த தலைப்பிற்கு பொருள் கொண்டுள்ளேன். நம் வாழ்வில் மாற்றங்கள் நிகழாமல் எதுவுமே நடை பெறுவதில்லை. … Continued
விலங்குக்குள் மனிதம்
– வழக்கறிஞர் த. இராமலிங்கம் விலங்கினத்தில் இருந்து மனிதன் மாறுபட்டு இருப்பது, அவனது அறிவினால்தான். அந்த அறிவினால் பயன் ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? பிறருக்கு வரும் துன்பத்தினைத் தன் துன்பமாக எண்ணுவதுதான் அறிவின் உண்மை யான பயன் என்கிறான் வள்ளுவன். அப்படியொரு எண்ணம் தோன்றவில்லை என்றால், அறிவினால் விளையும் நன்மை வேறொன்றில்லை என்றும் கூறுகிறான். … Continued
உங்கள் பிள்ளைகள் அயல்நாடுகளில் படிக்க போகிறார்களா?
பயன்மிக்க பாதுகாப்பு டிப்ஸ் – பிரதாபன் அயல்நாட்டில் படிப்பு என்னும் அற்புத மான வாய்ப்பு உங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கப் போகிறதா? வாழ்த்துக்கள். பல இலட்சங்கள் செலவுசெய்து புதிய இடத்தில் படிக்கப்போகும் பிள்ளைகள் அதீத உற்சாகத்தில் வம்பை வரவழைத்துக் கொள்ளாமல் இருப்பதும் முக்கியமில்லையா? சர்வதேச கல்வியியல் நிபுணர்கள், புதிய சூழலில் மாணவ மாணவியர் பின்பற்றவேண்டிய சில பாதுகாப்பு … Continued
புள்ளிகளை இணையுங்கள் பெரும்புள்ளிகளாய் ஆவீர்கள்..
– வினயா இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் என்ற கவிஞர் எழுதிய வரிகள் இவை. ஒரு மனிதன் தன்னுடைய வட்டத்தைப் பெருக்கிக் கொண்டே போகிற போது, அவனுடைய சக்திவட்டமும் பெருகி விரிகிறது என்பதை இந்தக் கவிதை வரிகள் சொல்லாமல் சொல்கிறது. தன்னை பிரபஞ்சத்தில் ஒரு துளியாகப் பார்ப்பவர்கள் சாதாரண மனிதர்கள். தங்களை பிரபஞ்சத்தின் ஒளியாகப் பார்ப்பவர்களே சாதனை மனிதர்கள்.
அறிய வேண்டிய ஆளுமைகள்
-மரபின் மைந்தன் முத்தையா டேல் கார்னகி சுயமுன்னேற்ற உலகில் ஒவ்வொருநாளும் உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று டேல் கார்னகி. அமெரிக்காவில் உள்ள மிசௌரியில், ஏழை விவசாயிக்கு மகனாக 1888இல் பிறந்தவர் இவர். இனிதாகக் கழியவில்லை, இளமைப்பருவம். பொறுப்புக்களுடன் போராடிக்கொண்டே படிக்க வேண்டியிருந்தது.
பில்கேட்ஸ் தேவையா இது உங்களுக்கு..?
‘கம்டெக்ஸ்’ என்ற பெயரில் கம்ப்யூட்டர் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய பில்கேட்ஸ், ”கார் தயாரிக்கும் நிறுவனமாகிய ஜெனரல் மோட்டர்ஸ், கம்ப்யூட்டர் துறை போல் புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்திருந்தால், 25 டாலர்களுக்கு கார்கள் கிடைக்கும். ஒரு கேலன் டீசலுக்கு ஆயிரம் மைல்கள் ஓட்டலாம்” என்றாராம்.
நமது பார்வை
தேர்தல் கமிஷன் முன்வைத்திருக்கும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் வேகம், நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், தேர்தல் நடக்க வேண்டிய முறைகள் குறித்தும் மிகத் தெளிவான வரையறைகள் முன்மொழியப் பட்டுள்ளன என்றாலும், இந்த விதிகளின் வெற்றி, வாக்காளர்களின் கைகளில்தான் இருக்கிறது.
ஒப்பிட்டுப் பார்க்க முடியாத தனித்துவம்
– இயகோகோ சுப்பிரமணியம் கடலின் ஆழமும், மனதின் உயரமும் அதனதன் நிலையில் சரிசமமே! பணத்தைக் கொண்டு வெற்றியை அளப்பது எந்த நிலையிலும் பெரும் தவறே! துரையைச் சேர்ந்த ஒருவர் அலுவலகத்தில் உங்களுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார். உங்களைப் பார்க்கவேண்டுமாம்’ என்ற செய்தியை நண்பர் ரங்கநாதன் தெரிவித்தார். அப்போதுதான் வியாபாரம்/ தொழில் இரண்டிலும் ஓராண்டைக் கடந்து எங்கள் சந்தையை … Continued
தேர்தல் காலம்; தேர்வுக்காலம்
தமிழக மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும் அதே நேரத்தில் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருப்பார்கள். தேர்வுக்கு எப்படி தயாராவது என்பதை தேர்தலுக்குத் தயாராகும் தலைவர்களைப் பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும் என்பதுதான் வியப்பான உண்மை.
உருட்டிய தாயத்தின் எண்ணிக்கை
உருட்டிய தாயத்தின் எண்ணிக்கை ஒவ்வொரு தடவையும் கலந்துவரும் விரட்டிய பாம்பால் விழுந்தவரும் ஏணியில் ஏறவே பரமபதம்! தோற்பதும் வெல்வதும் தொடருவது தொடக்கத்தில் யாருக்கும் இருப்பதுதான் ஆட்டத்தின் சூட்சுமம் விளங்கிவிட்டால் அதன்பின்னர் வெற்றி தொடர்கதைதான்!