மாத்தி யோசி – 4
– அனுராஜன் உதாசீனம் – வெற்றிக்கு உத்தி அது வெற்றியாளர்களுடனான சந்திப்பு. தனக்கு நடந்த பாராட்டுக்கூட்டத்தில் பேசி முடித்து இறங்கிய என் நண்பர், வருத்தத்துடன் சொன்னார், ”நான் வெற்றி பெற்றபிறகு இவ்வளவு பேரும் என்னை கொண்டாடுகிறார்கள். ஆனால் நான் வெற்றி பெறப் போராடிக்கொண்டிருந்த தருணத்தில், யாருமே என்னைக் கண்டு கொள்ளவில்லை. அன்று என்னை உதாசீனப் படுத்தினார்கள், … Continued
உள்ளும் புறமும்
– வழக்கறிஞர் த. இராமலிங்கம் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்த, பெரியவர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவருக்கு எடுக்கப்பட்டிருந்த ஊடுகதிர் (எக்ஸ்ரே) படத்தினை, அப்போது மருத்துவர் ஆய்வு செய்துகொண்டிருந்ததால் காத்திருக்க நேரிட்டது. அந்த நேரத்தில், அறிவியல் வளர்ச்சி பற்றியும் அதனால் மருத்துவத்துறை பெற்றிருக்கும் பிரம்மாண்டமான முன்னேற்றம் பற்றியும் மனம் அசைபோட்டு கொண்டிருந்தது.
உங்களை விளம்பரம் செய்யுங்கள்..!
– கிருஷ்ணன் நம்பி வேலைக்கு ஆட்கள் தேவை. அற்புத சுகமளிக்கும் கூட்டம். ஆறே வாரத்தில் சிகப்பழகு. டிசைனர் சாரீஸ். மூலம் பவுத்திரம் நிரந்தரத் தீர்வு’ இப்படி திரும்பிய திசையெங்கும் விளம்பரங்கள். ரேடியோ கேட்டால் விளம்பரம். டிவியை பார்த்தால் விளம்பரம். பத்திரிகையை திறந்தால் விளம்பரம், ஏன் தெருவில் நடந்தால்கூட சுவரெங்கும் விளம்பரங்கள். =சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்.’
பைவ்ஸ்டார் VS சூப்பர்ஸ்டார்
அத்வைத் சதானந்த் ஸ்டார் என்றால் பெரும்பாலும் நமக்கு ஏனோ சினிமா நட்சத்திரங்கள்தான் ஞாபகத்திற்கு வருகிறது. தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்தால் மட்டும்தான் ஸ்டார். இல்லை யென்றால் பளபளப்பு மங்கிவிடும். பைவ் ஸ்டார் என்ற வார்த்தையை ஹோட்டல் துறையில் மட்டும்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பறந்துகொண்டே மீன் பிடியுங்கள்..!
– மகேஷ்வரி சற்குரு ” ஆடு மேய்ச்சமாதிரியும் ஆச்சு! அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும்… ஆச்சு!” இது கிராமத்தில் கேட்கின்ற வழக்கமான வாக்கியம். ஒரு நேரத்தில் ஒரு வேலைதானே செய்யமுடியும். இது எப்படி? என்று நினைக்கத் தோன்றும். இது நேரத்தின் முக்கியத்துவத்தை சொல்லித் தருகின்ற கிராமத்தின் நேர்த்தி.
புத்தாண்டில் புதையல் எடுங்கள்!
தீர்மானங்களில் தீர்மானமாய் இருங்கள்..! உங்கள் திசைகளைத் தீர்மானிப்பது சுதந்திரம் மட்டுமல்ல. ஒருவகையில் பெரிய பொறுப்புணர்வும்கூட! ஜனவரி முதல் வாரத்தில் ‘ அதுவும் முதல் நாளில் உடற்பயிற்சிக் கழகங்கள் நிரம்பி வழியும். ஜனவரி முழுவதும் ஜிம்களில் பலரும் ஜம்மென்று பயிற்சிகளை மேற்கொள்வதைப் பார்க்க முடியும், மெல்ல மெல்ல அடுத்துவருகிற மாதங்களில் கூட்டம் குறையும். ஆண்டுக்கட்டணம் செலுத்திய வர்கள்கூட … Continued
நமது பார்வை
புதிய இலக்குகள்! புதிய விளக்குகள்! பற்பல துறைகளிலும் மாற்றங்களுக்கான வாய்ப்புகளுடன் புத்தாண்டு புலர்கிறது. வெளியில் உள்ள சூழல் மாறிக்கொண்டே இருப்பது போலவே, வளர்ச்சிக்குத் தக்கவாறு, மனிதர்களின் இலக்குகளும் மாறிக்கொண்டே வருகின்றன. தொடங்குகிற நேரத்தில் வகுத்த இலக்குகளுக்கும், தொடர்கிற நேரத்தில் வகுக்கிற இலக்குகளுக்கும் நடுவே நிச்சயம் மாற்றங்கள் இருக்கும்.
ஈஷியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு
– சாதனா இந்த உலகம் ஆசிரியர்களால் ஆனது. இந்த உலகத்தில் உள்ள சாதனையாளர்கள் அனைவரும் ஓர் ஆசிரியரால் உருவாக்கப்பட்டவர்கள்தான். அப்துல் கலாம்கூட தனது இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று ஆசிரியரைத்தான் குறிப்பிடுகிறார். இதை நான் ஒரு நிகழ்ச்சியில் சொன்ன போது, ஒரு மாணவன்
வால்போஸ்டர்
உங்கள் வீட்டை அலங்கரிக்க வேண்டிய போஸ்டர் தோல்வி என்பது கம்ப்யூட்டர் ஹேங்க் ஆவது போலத்தான்.. அடுத்து செய்வது ரீ-ஸ்டார்ட் என்பதைத்தான் அது சொல்கிறது.
வீட்டுக்குள் வெற்றி
– கிருஷ்ண வரதராஜன் உள்ளேன் ஐயா நான் முதன் முதலில் எழுதிய புத்தகம் நூற்றுக்கு நூறு. பல்வேறு தரப்பிலிருந்து அந்த புத்தகத்திற்கு பாராட்டு கிடைத்தாலும் என்னை பள்ளிப்பருவத்திலேயே, எழுத்திலும், பேச்சிலும் திருப்பிவிட்ட என் தமிழாசிரியர் அதைப் பெரிதாக சிலாகிக்கவில்லை.