கடந்த வாரம் கடவுளைச் சந்தித்தேன்…!

-அத்வைத் ஆனந்த் கடந்தவாரம் கடவுளைச் சந்தித்தேன். அவர்மேல் அதிக கோபத்தில் இருந்ததால் அவரை நான் கண்டுகொள்ளவில்லை. உலகில், சிலர் சாதனையாளர்களாக இருக்கிறார்கள். பலர் சராசரிகளாக இருக்கிறார்கள். ஏன் என்று கேட்டால், ‘தலைவிதி’ என்கிறார்கள். அதனால்தான் அதை எழுதிய கடவுள் மேல் கோபம் எனக்கு.

கான்பிடன்ஸ் கார்னர் – 4

கத்தியைக் காட்டி பணம் கேட்ட திருடனிடம் தன் மணிபர்சிலிருந்த அத்தனை பணத்தையும் தந்தார் அவர். பெருமிதத்துடன் திரும்பிய திருடனை, தோளில் தட்டிக் கூப்பிட்டார். அவருடைய கையில் துப்பாக்கி இருந்தது. அதிர்ந்துபோன இளைஞனிடம் சொன்னார், ”உன் உயிரைப் பணயம் வைத்து பணம் கேட்கிறாய் என்றால் அந்த அளவு

கடவுளின் இயல்பும்… கம்பெனியின் இயல்பும்…

ஒரு நிறுவனம், தன் அலுவலர்களை நடத்துகிற முறை குறித்து சில அறிவிப்புகளைச் செய்தது! ”இந்த நிறுவனத்தில் பகட்டாக உடை அணிந்து வருபவர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது. வசதியானவர்களை மேலும் வசதியானவர்கள் ஆக்குவது அழகல்ல.

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

தடம் பதியுங்கள் எல்லாத்திறமைகளும் இருக்கும்போது, ஆனால் உரிய வாய்ப்புகள் இல்லாதபோது, ஏற்படும் மனத்தடையை என்ன செய்வது? இந்தக் கேள்வியை பலரும் பலவிதங்களில் எதிர் கொள்வதுண்டு. சாதாரணமாக வருகிற பதில், உரிய வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பது. ஆனால், சாமர்த்தியசாலிகள் தருகிற பதில், உரிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான்.

கான்பிடன்ஸ் கார்னர் – 3

கூட்டம் கூட்டமாய் சில முள்ளம்பன்றிகள், குளிர் பிரதேசத்தில் மாட்டிக்கொண்டன. எல்லாம் நெருக்கமாய் நின்று கொண்டால் அந்த நெருக்கத்தின் உஷ்ணம், குளிரிலிருந்து காப்பாற்றும் என்ற யோசனை பிறந்தது. ஆனால், நெருங்கி நிற்கும்போது உடலின் முள் ஒன்றின்மேல் ஒன்று குத்தி ரத்தம் கசிந்தது. அதற்கு பயந்து தள்ளி நின்ற ஒன்றிரண்டு முள்ளம்பன்றிகள், குளிரில் உறைந்து செத்தன.

கான்பிடன்ஸ் கார்னர் – 2

வயது முதிர்ந்த தந்தையின் தொண தொணப்பால் நடுத்தரவயது மகன் எரிச்சலில் இருந்தார். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல், காகத்தைக் காட்டி, ”அது என்ன பறவை” என்று தந்தை இரண்டு மூன்று முறை கேட்டார். எரிச்சலான மகனிடம், நாற்பது வருடங்களுக்கு

கான்பிடன்ஸ் கார்னர் – 1

மற்றவர்களின் அனுபவங்களைக் கேட்பதில் விருப்பமில்லாத இளைஞனிடம், விரைவில் செரிக்கும் முக்கிய உணவின் பட்டியலை எழுதச் சொன்னார் அவனுடைய தந்தை. அவனுடைய பட்டியலில் முதலில் இருந்தது, ”தேன்”. அதைப் பார்த்ததும் தந்தையின் முகத்தில் புன்னகை அரும்பியது. மகனிடம் கேட்டார், ”தேன் ஏன் சீக்கிரம்

நேற்றைய நினைவுகளே இன்றைய நிஜங்கள்…

– ருத்ரன் ” நினைப்புதான் பொழப்பு கெடுக்குது….. நினைப்பு இருக்க யானை மேய்க்க… ஆனா…” இந்த வாக்கியங்கள் இன்றும்கூட சில வீடுகளில் பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால் இன்றைய இளைஞர்கள், இந்த வாசகங்களை பெரீய… இரப்பர் வைத்து அழித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

மூன்று சொற்கள்

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர், வார இதழ் ஒன்றில் படித்த கதை ஒன்று அடிக்கடி நெஞ்சில் நிழலாடும். நள்ளிரவு நேரத்தில் தனியாகத் தொடர் வண்டியில் வந்து இறங்குகிறாள் ஓர் இளம்பெண். அந்த நிலையத்தில், தொடர் வண்டியில் சிலர் ஏறினார்களே தவிர, அவளைத்தவிர வேறு எவரும் இறங்கவில்லை. சில கிலோமீட்டர் தொலைவில் அவளது … Continued

திறக்கும் திசைகள்

ஆயிரம் எரிமலை எரிக்கிற எதையும் அன்பெனும் மழைத்துளி அணைத்துவிடும் காயங்கள் எத்தனை மனம்கொண்டாலும் கனிவே நம்பிக்கை மலர்த்திவிடும் மாயங்கள் செய்வது மானிட நேயம் மனதில் இதனைப் பதித்துவிடு