மூன்று சொற்கள்

– வழக்கறிஞர் த. இராமலிங்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர், வார இதழ் ஒன்றில் படித்த கதை ஒன்று அடிக்கடி நெஞ்சில் நிழலாடும். நள்ளிரவு நேரத்தில் தனியாகத் தொடர் வண்டியில் வந்து இறங்குகிறாள் ஓர் இளம்பெண். அந்த நிலையத்தில், தொடர் வண்டியில் சிலர் ஏறினார்களே தவிர, அவளைத்தவிர வேறு எவரும் இறங்கவில்லை. சில கிலோமீட்டர் தொலைவில் அவளது … Continued

திறக்கும் திசைகள்

ஆயிரம் எரிமலை எரிக்கிற எதையும் அன்பெனும் மழைத்துளி அணைத்துவிடும் காயங்கள் எத்தனை மனம்கொண்டாலும் கனிவே நம்பிக்கை மலர்த்திவிடும் மாயங்கள் செய்வது மானிட நேயம் மனதில் இதனைப் பதித்துவிடு

நமக்குள்ளே

நமது நம்பிக்கை இதழ் சிறந்த இதழ். மாணவர்களின் நலன்களையும், பணிபுரிபவரின் கருத்துக்களைவும் வெளியிடும் உன்னத இதழ். கான்ஃபிடன்ஸ் கார்னர், வாழ்க்கையின் திருப்பம். தடைகள் தகர்த்த கலாம், பகுதி ஏற்கெனவே படித்திருந்தாலும் புதிய தகவலை கொண்டு செல்கிறது,

இதழ் வழியே SMS

மனதிற்கும் மூளைக்கும் இடையே குழப்பங்கள் ஏற்படும்போது மூளை சொல்வதை கேட்காதீர்கள். ஏனெனில் மூளைக்கு அனைத்தும் தெரியும். மனதிற்கு உங்களை மட்டும்தான் தெரியும்.

அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின்மைந்தன் ம. முத்தையா சான் வால்டன் வால்மார்ட் – வரலாற்ற நாயகன் என் வீட்டிலிருந்த பசுமாட்டைத் தடவிக் கொடுத்துவிட்டு, வேக வேகமாய் பால் கறந்து கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். பாலைப் புட்டிகளில் அடைத்து வாடிக்கையாளர்கள் வீடுகளில் கொடுக்க வேண்டும். அதன்பிறகு வீடு வீடாய் நாளிதழ்கள் விநியோகிக்க வேண்டும். அப்புறம் கிளம்பிப் பள்ளிக்கூடம் போகவேண்டும்.

சந்தேகம் சந்தனராஜ்

சந்தேகம் சந்தனராஜ் – 1 ”வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் உணவை வாயின் வலது பக்கம் மெல்வார்கள். இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் இடது பக்கம் மெல்வார்கள்” அப்போது அவுக் அவுக்னு அள்ளிப் போட்டுக்கிறவங்க எந்தக்கை பழக்கம் உள்ளவங்க?

மனசு பெரிய மனசு

அந்தத் தொண்டு நிறுவனத்தின் சேவைக்கு எல்லா வணிக நிறுவனங்களுமே நன்கொடைகள் தருவதுண்டு. ஒருவர் மட்டும் ஒரு தடவைகூட நன்கொடைகள் எதுவும் தந்ததில்லை. இத்தனைக்கும் ஒவ்வோர் ஆண்டும் அவருக்குக் கிடைக்கும் நிகர லாபம் மட்டும் மூன்று கோடி ரூபாய்.

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

– சினேக லதா   நேனோ பெயர் ஏனோ குறைந்த விலையில் சிறந்த தரம் என்பது சாத்தியமேயில்லாத விற்பனை சாமர்த்தியம் என்பது பொதுவான எண்ணம். சொல்லப் போனால், பாமரர்களை நம்பும் வியாபாரங்களில் பேசப்படுகிற ஆசை வார்த்தைகள் என்றும் அவற்றை சொன்னவர்கள் உண்டு.

பளிச் விஷயங்கள் 10

கூகிள் என்றால்………….. பல இலட்சம் பூஜ்யங்கள் கொண்ட எண் என்று பொருள். கழுத்தை உயர்த்தவிடாமல் கட்டினாலோ பற்றினாலோ சேவல்களால் கூவ முடியாது. மரணத்திற்குப் பிறகும் வளரக்கூடியவை மனிதனின் தலைமுடியும் நகமும்தான்.

நமது பார்வை

இது குழந்தைகளுக்கான உலகம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான காப்பீடுகள், பாதுகாப்பு என்று எண்ணிலடங்காத திட்டங்கள் பெற்றோர் மனங்களில் எழுவதுண்டு. ஆனால் குழந்தைகளின் நிகழ்காலத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்யும் உணர்வு ஒரு பேரிழப்பிற்குப் பிறகு தீவிரமாகியிருக்கிறது.