நமது பார்வை: இந்தக் கோலம் என்று மாறும்?

மக்கள் பிரதிநிதிகளின் மண்டபங்கள் மோதல் மேடைகளாகவே மாறிவிட்டிருக்கின்றன. நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களும், சட்டமன்றக் கூட்டத் தொடர்களும் அமளியிலும் வெளிநடப்பிலுமே முடிகின்றன.

அரசியல் பேதங்கள் ஆயிரம் இருப்பினும், மக்கள் பிரதிநிதிகள் கூடும்போது அவை சிக்கல்களின் தீர்வுகளாவதே நியாயமே தவிர, புதிய சிக்கல்களின் பிறப்பிடமாய் ஆகிவிடக் கூடாது.

சமீபத்தில் நாடாளுமன்ற – சட்டமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது பற்றி சபாநாயகர்களின் சந்திப்பில் கவலையோடு பரிசீலிக்கப்பட்டுள்ளது.

தங்கள் உரிமைகளைக் கட்டிக்காப்பது போலவே பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் கடமைகள் மீதும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஓர் உறுப்பினரின் தலையாய உரிமையே தன்னுடைய கடமையை செவ்வனே நிறைவேற்றுவது தான்.ஒவ்வொரு முறையும் பாராளுமன்றம் கூடும் முன் நல்லிணக்கக் கூட்டங்கள்நடைபெறுகின்றன. ஆனால், அந்தக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் காற்றில் பறக்கின்றன.

வரிப் பணங்களில் பல கோடிகளைக் கரைத்தபடி பயனின்றிப் போகும் கூட்டங்கள், அடுத்துவரும் தேர்தலின் போது மக்களுக்கு மறந்து போய்விடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *