நமது பார்வை

உங்கள் வாழ்வில் உள்ளாட்சி உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று முடிந்திருக்கும் நேரமிது. ஊக்கத்துடன் வாழ்வை நிகழ்த்த விரும்பும் நமக்கும் உள்ளாட்சி குறித்த புதிய விழிப்புணர்வு தேவை. உள்ளாட்சி என்றால் ஊர்நிலையில் அல்ல. உள்நிலையில் நிகழும் உள்ளாட்சி. ஒரு மனிதர் தன் உடல் நலனை நிர்வகிப்பதும், உள்ள உணர்வுகளை ஒழுங்கு செய்வதும், மூச்சுப்பயிற்சி, யோகப்பயிற்சி தியானம் மூலம் உள்நிலையில் … Continued

நமது பார்வை

உலகெங்கும் 137 நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்திருக்கிற நிலையில் அந்தப் பட்டியலில் தாமதமாகவேனும் சேரும் வாய்ப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. கொலைக்குற்றத்துடன் தொடர்புடைய வர்கள் என்ற நிலையில் சிறையிலடைக்கப்பட்டு கால வரையறையே இல்லாமல் சிறையில் கிடந்து, வாழ்வின் வசந்தங்கள் வற்றிப்போன நிலையில் தூக்கு தண்டனை என்பது தனிமனித உரிமைகளுக்கு முற்றிலும் முரணானது. தீர்ப்பு விதித்த நீதிபதி … Continued

நமது பார்வை

சூழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிராய் உள்ளடங்கி ஒலித்துக் கொண்டிருந்த குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. பொன்னான கனவுகளுடன் அன்னா ஹசாரே மீண்டும் மக்கள் சக்தியைத் திரட்டத் தொடங்கி விட்டார். அவருக்கு அதிக வேலை வைக்காமல் பொதுமக்களும் பொதுநல இயக்கங்களும் தாமாக முன்வந்து அன்னா ஹசாரே அருகே நிற்கிறார்கள்.

நமது பார்வை

பாடங்கள் நடைபெறாத நிலையில் பள்ளிக்கூடங்கள் இயங்கிய போது, பிள்ளைகள் பள்ளிக்கு சென்றனர். பொதுஅறிவு சார்ந்த விஷயங்களை சொல்லித் தருமாறு ஆசிரியர்கள் பணிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி சில கிராம நூலகங்களில் பிள்ளைகளைக் காண முடிந்தது. பாடத்திட்டம் இல்லாத சூழலில் பிள்ளைகளின் இயல்பான நுண்ணறிவு வெளிப்படும் விதமாக உரையாடல்களும் உறவாடல்களும் ஆசிரியர்கள்- மாணவர்கள் மத்தியில் நிகழ்ந்திருக்கும்.

நமது பார்வை

கல்வி கரையில இது, பழம்பாடல் ஒன்றின் தொடக்கவரி. இருபத்தோராம் நூற்றாண்டில் இந்த வரிக்கென்று இன்னும் பல பொருளுண்டு. கல்வி நிலையக் கட்டணங்கள் தொடர்பான சர்ச்சை பல ரூபங்கள் எடுத்து, பள்ளி உண்டு பாடம் இல்லை என்னும் நிலை வரை கொண்டு வந்துவிட்டுள்ளது.

தெளிவாய் ஒரு தீர்ப்பு..!!

தமிழக மக்களின் தனித்தன்மைகளில் ஒன்று, ஒரே குரலில் ஓங்கி ஒலிப்பது. கிராமம் நகரம் என்னும் பேதமின்றி, செல்வந்தர் -ஏழைகள் என்னும் வேறுபாடின்றி, படித்தவர் -பாமரர் என்னும் வித்தியாசமின்றி ஒருமித்த குரலில் ஒரு தீர்ப்பைத் தருவதில் தனி முத்திரை பதிப்பவர்கள் தமிழக மக்கள். இந்தத் தேர்தலிலும் இது நிகழ்ந்துள்ளது. அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள அரசு உருவாகியுள்ளது. ஊடகங்கள் … Continued

தேர்தல் என்பது எதுவரை

காதலும் கல்யாணமும் எதுவரை என்பதற்கு கவியரசு கண்ணதாசன் கேள்வி பதிலாகவே ஒரு பாடல் எழுதியிருப்பார். “காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும்வரை! கல்யாணம் என்பது எதுவரை? கழுத்தினில் தாலி விழும்வரை!” என்பது அந்தப் பாடல். கவிஞர் இன்று இருந்திருந்தால், “தேர்தல் என்பது எதுவரை” என்று புதிய பாடல் ஒன்றை இயற்றியிருப்பார். நடந்து முடிந்த தேர்தலில் … Continued

நமது பார்வை

தேர்தல் கமிஷன் முன்வைத்திருக்கும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் வேகம், நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், தேர்தல் நடக்க வேண்டிய முறைகள் குறித்தும் மிகத் தெளிவான வரையறைகள் முன்மொழியப் பட்டுள்ளன என்றாலும், இந்த விதிகளின் வெற்றி, வாக்காளர்களின் கைகளில்தான் இருக்கிறது.

தேர்தல் காலம்; தேர்வுக்காலம்

தமிழக மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும் அதே நேரத்தில் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருப்பார்கள். தேர்வுக்கு எப்படி தயாராவது என்பதை தேர்தலுக்குத் தயாராகும் தலைவர்களைப் பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும் என்பதுதான் வியப்பான உண்மை.

நமது பார்வை

புத்தகக் காதல் ஒவ்வொரு மனிதனுக்கும், அந்தரங்கமான நட்பாய் அன்றும் இன்றும் புத்தகங்களே இருக்கின்றன. நின்று நிதானித்து, நெறிபட உரையாட புத்தகங்கள்போல் உற்றதுணை பூமியில் இல்லை. விரும்பிய நேரத்தில் வள்ளுவரோடு, கருதிய நேரத்தில் கம்பரோடு, பிரியப்படும் போதெல்லாம் பாரதியோடு பேசி மகிழும் பெரும் வாய்ப்பு புத்தகங்கள் மூலமே கிடைக்கின்றன.