காப்பீட்டு முகவர்களே கவனியுங்கள்

-இரா. கோபிநாத்,

காலத்தை அதன் போக்கிலேயே விட்டுவிடாமல் படைப்பாற்றல் திறனால் காலத்தையே தமது போக்கிற்கு மாற்றியமைத்து வெற்றி கண்டவர்கள் பலர் உண்டு. இவர்களால் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் நாட்டிற்கே பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கிறது. டாக்டர் வர்கீஸ் குரியன், திரு நாராயண மூர்த்தி, டாக்டர் அஞ்சி ரெட்டி போன்றவர்களால் நம் சமுதாயம் அடைந்த லாபத்திற்கு அளவே இல்லை.

இவர்கள் வாய்ப்புக்களுக்காகக் காத்துக் கொண்டில்லாமல் துணிகரமான மாற்றங்களைத் தங்கள் செயல் முறைகளில் உருவாக்கி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். தற்போது நமது பிரதமராக இருக்கும் டாக்டர் மன்மோகன் சிங்க் முன்பு நிதியமைச்சராகப் பொறுப்பேற்றசில மாதங்களில் நாடாளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் (1991) நம் நாட்டின் பொருளாதார இதிகாசத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இன்று உலக அளவிலே இந்தியா பெருமதிப்புப் பெற்றநாடாகத் திகழ்வதற்கு இந்தத் திருப்புமுனை ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

ஒரு வட்டத்திற்கப்பால் சிந்திப்பது, (ற்ட்ண்ய்ந்ண்ய்ஞ் ர்ன்ற் ர்ச் ற்ட்ங் க்ஷர்ஷ்), அதாவது வழக்கத்திற்கு மாறாக யோசிப்பது என்பது நமது வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காட்டும். ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் முகாமையாளர் பதவிக்காக நேர்முக தேர்வு நடத்தினார்கள். சுமார் 200 பேர் கலந்துக்கொண்ட அந்தத் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி இது, இதற்கான விடை கண்டுபிடிப்போம் வாருங்கள்.

“நீங்கள் உங்கள் காரை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் காரில் இன்னும் ஒருவரை ஏற்றிக்கொள்ள மாத்திரம் இடம் இருக்கின்றது என்று வையுங்கள். நன்றாக மழை பெய்து கொண்டிருகிறது. காற்றும் பலமாக வீசிக்கொண்டிருக்கிறது. இடி மின்னல் வேறு. இந்த நிலையில், சாலையோரத்தில் பஸ்ஸ÷க்காக மூன்று பேர் காத்து நிற்கிறார்கள். ஒருவர் மிகவும் வயோதிகர், இருமிக்கொண்டிருகிறார். தள்ளாத வயது, இன்னும் அதிக காலம் அவரால் உயிர் வாழ வாய்ப்பில்லை. இன்னுமொருவர், ஒரு இளம் பெண், நீங்கள் நீண்ட நாட்களாகச் சந்தித்து பேச விரும்பிக் கொண்டிருக்கும் அழகி. மூன்றாம் நபர் உங்களின் அருமை நண்பர். உங்களுக்கு நிறைய உதவி செய்தவர், நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள்? இறக்கும் தருவாயில் இருக்கும் அந்த முதியவரை அழைத்துப் போவீர்களா? நல்ல வாய்ப்புக் கிடைத்தது என்று அந்தப் பெண்ணை அழைத்துப் போவீர்களா? அல்லது நன்றி பாராட்டி உங்களுக்குப் பல உதவிகளைச் செய்த நண்பனை அழைத்துப் போவீர்களா?

இந்தக் கேள்விக்கான பதிலை வைத்து முகாமையாளரைத் தெர்ந்தெடுத்தார்கள். சரி நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?

படைப்பாற்றல் திறமையை வளர்ப்பதற்கு மேலும் ஒரு வழிதான் எந்த ஒரு விடையத்திலும் சில நிறைகளும் இருக்கும், சில குறைகளும் இருக்கும், இதனைப் பாகுபடுத்தி ஆய்ந்து முடிவெடுப்பது பல நன்மைகளைச் சேர்க்கும். இதனை எட்வர்ட் டி போனா தனது லேற்றல் திங்கிங்க் என்றபுத்தகத்தில் விவரித்திருகிறார். ஆனால் இதில் சில விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியிருகின்றது. முதலில் நேர்மறையான விடையங்களை அலசிப் பார்க்கவேண்டும். அதன் பிறகு எதிர்மறைவிடையங்களையும் பிற்பாடு சுவாரசியமான விடையங்களையும் (ஐய்ற்ங்ழ்ங்ள்ற்ண்ய்ஞ்) கவனிக்கவேண்டும். இதே கிரமப்படி ஆராயவேண்டும். நேர்மûறான விடையங்கள் குறித்து அலசும்போது, எதிர்மறைவிடையங்கள் குறித்துச் சர்ச்சிக்கக் கூடாது. வரிசையாக நேர்மறையான விடையங்களை ஆராய்ந்து பார்த்த பிறகு அடுத்த விடையத்திற்குப் போகவேண்டும். அனைத்துக் கருத்துக்களையும் இது போலப் பட்டியலிட்ட பிறகு ஒரு முடிவிற்கு வரவேண்டும்.
இக் கருத்து நமக்கு ஒன்றும் புதிது அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு தெய்வப்புலவர் திருவள்ளுவர்
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்
என்றார். இதையே நான் டஙஐ என்று நாம் இப்போது அறிகின்றோம். இதனுள் ஒரு புதுமை என்னவென்றால், சுவாரசியமான விடையங்களை ஆராய்வதுதான். நாம் சந்திக்கும் பல நிகழ்ச்சிகளில் நேர்மறைஅல்லாது, எதிர்மறையும் அல்லாத ஆனால் சுவாரசியமான சில கருத்துக்கள் பொதிந்திருக்கும். இந்தச் சுவாரசியமான கருத்துக்களைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், மேலும் பலவிதங்களில் உதவியாக இருக்கும். ஆனால் இன்று நடைமுறைவாழ்க்கையில் ஒன்று நேர்மறையான விடையங்கள் பற்றி மாத்திரம் பேசுவார்கள் அல்லது எதிர்மறைவிடையங்களைக் குறித்துச் சர்ச்சிப்பார்கள், சம்பந்தப் பட்ட வேறு தகவல்கள் குறித்து அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். இந்தக் கருத்தை நன்கு புரிந்துக்கொள்வதற்கு ஒரு பயிற்சி செய்து பார்ப்போம். சென்றஇதழில் நாம் ஒரு நாட்டில் வேலையில்லாத பட்டதாரிகளின் பிரச்சனையும் அதனைத் தீர்த்துவைக்க அரசாங்கம் மேற்கொண்ட அணுகுமுறையும் பார்த்தோம். இந்த வேலையில்லாப் பட்டதாரிகளுக்குப் பண உதவி என்றஒரு கருத்துக்கு ல்ம்ண் செய்து பார்ப்போம்.

நேர்மறை விடயங்கள்:

; பட்டதாரிகள் தங்கள் வாழ்க்கையில் ஒரு சுயமரியாதையுடன் வாழ முடியும்.
; பட்டப்படிப்புப் படிப்பதற்குப் பல இளைஞர்கள் ஊக்கமடைவார்கள்.
; அவர்கள் இந்த உதவியைப் பாராட்டி நாட்டுபற்றோடு பல சேவைகள் செய்வார்கள்.
; மேற்கொண்ட அவர்கள் படிப்பதற்கும், ஆய்வுகள் செய்வதற்கும், இந்தப் பணம் உதவியாக இருக்கும்
எதிர்மறை விடையங்கள்

; உழைப்பில்லாத ஊதியம் அவர்களில் சில தீயபழக்கங்களை வளர்த்து விடும்.
; அரசாங்கத்திற்கு இது ஒரு பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தி விடும்.
; இளைஞர்கள் உழைப்பின் மதிப்பு தெரியாமல் சோம்பேறிகளாக மாறி விடுவார்கள்.
சுவாரசியமான விடையங்கள்:

; வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது அரசாங்கத்தின் கடமையாகும்.
; ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும்
; இந்த உதவிப்பணத்தை பட்டுவாடா செய்வதற்கு பல வேலைகள் உருவாக்கப்படும்.; உதவிப்பணம் அல்லாது பண்டமாகக் கொடுக்கலாம்.

அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் ஒரு கூட்டத்தில் இது போன்றல்ம்ண் செய்த பிறகுதான் அவர்கள் ‘பண உதவி முடிவு தவறானது என்றநிலைப்பாட்டிற்கு வந்தார்கள். இதில் சுவாரசியமான விடையங்களில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்ட உதவிப்பணம் அல்லாது பண்டமாக கொடுக்கலாம்” என்றகருத்தை விவரித்துத்தான் பட்டதாரிகளுக்கு இயந்திரங்களையும் கணிப்பொறிகளையும் கொடுத்து சுய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தார்கள்.

படைபாற்றல் திறமை என்பது இந்தக் காலத்தில் ஒரு அடிப்படைத் தேவையாக பல திறமைகளையும் வெளிக் கொணர்வதற்கு ஒரு வாயிலாக விளங்குகிறது. மாற்றங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. இந்த உலகத்தில் நிரந்தரமாக இருப்பது மாற்றங்கள் தான். இந்த உண்மையை ஒப்புக்கொண்ட பிறகு கூட இந்த மாற்றங்களினால் ஏற்படும் முடிவுகளைப் பலர் விரும்புவதில்லை. ஒரு சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டால் கூட மிகவும் கலங்கி விடுகிறார்கள். சில அலுவகங்களில் ஒரு பணியாளரின் இருக்கையை மாற்றி அமைப்பது கூடப் பெரிய சிக்கலான விடையமாக இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் தமக்கென்று சொந்தமான ஒரு நிலம் வாங்கி அதில் வடிவான ஒரு கட்டிடத்தை அமைத்த பிறகு புதிய கட்டிடத்திற்கு அலுவல்களை மாற்றுவதற்குப் பணியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தான் அலுவல்களை மாற்றமுடிந்தது.

மாற்றத்தின் காரணமாகச் சில அசௌகரியங்கள் ஏற்படலாம். பழகிப் போன சூழ்நிலையிலிருந்து ஒரு புதிய சூழ்நிலைக்கு மாறும் போது மனதில் சங்கடம் ஏற்படுகிறது. பழகிப்போன சூழ்நிலைகளில், நமது நடவடிக்கைகள் இயந்திரத்தனமாக நடந்துகொண்டேயிருக்கும். அதனால் அதிகம் மூளைக்கு வேலையில்லை. ஒரு சிங்கம் காட்டில் வாழும் போது, தினமும் வேட்டையாட வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. தினமும் புதிய முயற்சிகள் எடுக்கவேண்டும். புதிய பகுதிகளுக்குப் போக வேண்டும். வேட்டையில் சிக்கும் மிருகத்திற்குத் தகுந்த வகையில் தனது வேகத்தையும் அணுகுமுறையும் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் அதே சிங்கம், ஒரு மிருகக்காட்சி சாலையில் அடைபட்ட பிறகு, அதற்குச் சரியான நேரத்தில் உணவு கிடைக்கின்றது. வேட்டையாடத் தேவையேயில்லை. சில மாதங்களில் இந்தச் சூழ்நிலை பழகிப் போகிறது. இந்நிலையில் மீண்டும் காட்டில் கொண்டு விட்டுவிட்டால், இந்தச் சிங்கம் மிகவும் சிரமப்படும். இயற்கையிலே வேட்டைகுணம் படைத்த அந்த சிங்கம் கூட இப்போது மிகவும் தடுமாறுகிறது.

நமது மனமும் அது போலத்தான். இயற்கையிலே சிந்தித்துச் செயலாற்றும் நாம், நீண்ட காலமாக ஒரு சூழ்நிலையில் இருக்க நேர்ந்தால், பழக்கத்தின் காரணமாக சிந்திக்கத் தேவையில்லாத ஒரு நிலை ஏற்படுகிறது. பின்பு மாற்றத்தின் காரணமாக மீண்டும் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்றநிலை ஏற்படும் போது மனம் சற்று படபடப்பது சகஜம் தானே. ஒரு சிறிய மாற்றத்தினாலே இப்படி தடுமாற்றம் ஏற்படுகிறது என்றால் பெரிய பாதிப்புகள் ஏற்படுத்தும் பெரிய மாற்றங்கள் சில வேளைகளில் நிலைகுலையச் செய்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *