சந்தைப் படுத்துவோம்! சாதனை குவிப்போம்!

-தி. க. சந்திரசேகரன்

முன்னிலைப்படுத்துதல் என்றால் என்ன என்பதையும், அதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் சென்ற இதழில் கண்டோம். இனி அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி ஆராயலாம்.

ஒரு பொருளை முன்னிலைப்படுத்தும் போது ஆரம்பத்தில் அதனுடைய விற்பனை அதிகரிக்கின்றது என்பது ஒரு பரவலான அனுபவம். ‘அந்தப் பொருளை வாங்கிப் பார்க்கலாம்’ என்ற ஆர்வம் மக்களிடையே தூண்டப்படுவது உண்மை. ஆனால், நாளடைவில் அந்த ஆர்வம் குறைந்துபோய் பொருட்கள் விற்பனையாகாமல் தேங்கும் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பதும் உண்மை.

உங்கள் ஊரில் ஒரு கண்காட்சி நடக்கின்றது. ஓர் எலக்ட்ரானிக் சாதனத்தை அறிமுகப்படுத்து கிறார்கள். அதனை வாங்கினால் ஒரு கணக்கிடும் கருவி இலவசம் என்று அறிவிக்கின்றார்கள். நீங்களும் வாங்குகிறீர்கள். கண்காட்சி முடிந்து விடுகின்றது. அதோடு பொருளையும் மறந்து விடுகிறீர்கள்.

பெரும்பாலும் இப்படி அறிமுக விழாவில் பொருட்கள் வாங்குவதை ஐம்ல்ன்ப்ள்ங் ஆன்ஹ்ண்ய்ஞ் – ‘திடீர் தூண்டுதலால் வாங்குவது’ என்கிறோம். பொருள் வாங்க வேண்டும் என்று பொருளின் மீது காட்டும் அக்கறையை விட, அந்த இடத்தில், நான்கு பேருக்கு முன்னால் ஏதாவது வாங்க வேண்டும் என்ற திடீர் உந்துதலால் வாங்குபவராக இருந்தால் நீங்கள் தொடர்ந்து வாங்கமாட்டீர்கள்.அதனால்தான் சிலர் போன மாதம் லக்ஸ், இந்த மாதம் டவ், அடுத்த மாதம் சந்திரிகா என்று அடிக்கடி சோப்புகளை மாற்றி, மாற்றி வாங்கிக் குளித்துக் கொண்டிருப்பார்கள்.

முன்னிலைப்படுத்தும் போது மக்களுக்கு ஐயம் ஏற்படுகிறது. ‘இந்தப் பொருள் அவ்வளவு தரமானதாக இல்லையோ? அதனால்தான் கூவிக் கூவி விற்கிறார்களோ!’ என்ற ஐயம் பலருக்கு ஏற்படும்.

‘தள்ளுபடி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் ஏதேனும் ஒரு வகையில் ஓர் உதவாத பொருளைத் தள்ளிவிடுகிறார்கள் என்றே பலரும் எண்ணுகிறார்கள்.

ஒரு பொருளை யாருக்கும் வாங்கப் பிடிக்கவில்லை என்றால் 25% குறைத்துத் தருகிறேன் என்று விளம்பரம் செய்தால் விலையாக்கலாம் என்ற அணுகுமுறையே ‘தள்ளுபடி’ என்று எண்ணுபவர்களும் உண்டு. அப்படி நினைப்பதில் ஓரளவு நியாயமும் உள்ளது.

தள்ளுபடி பொருட்கள் என்றாலேயே ‘இது தரமற்றது’ ‘மக்களுக்குப் பிடிக்காதது’ ‘பழைய சரக்கு’ ‘இன்றைய நடைமுறைக்கு ஒத்து வராதது’ என்றெல்லாம் எண்ணம் வரும்போது அந்தப் பொருள் மக்களின் மனத்தில் இடம் பிடிக்க முடிவதில்லை.

இன்னும் சில ஐயங்கள் தோன்றுகின்றன. அது எப்படி ஒரு பொருளின் விலையை அந்த அளவுக்குக் குறைக்க முடிகின்றது?ரூ.100க்கு விற்க வேண்டிய பொருளின் விலையை ரூ.150 என்று குறித்து 20% தள்ளுபடி என்ற அறிவித்து ரூ.30 ஐக் குறைத்து ரூ.120க்கு விற்பார்கள். வாங்குபவன் ரூ.30 தள்ளுபடி செய்து விட்டார்களே என்று அகமகிழ்ந்து வாங்குவான். ஆனால், உண்மையில் அவன் நியாயமாக வாங்கியிருக்க வேண்டிய விலையை விட ரூ.20 அதிகம் கொடுத்திருக்கிறான் என்பது தான் நடந்தது.

இப்படிப்பட்ட எண்ணம் இருப்பதால்தான் தள்ளுபடிப் பொருட்களை ஒருவித ஐயத்துடன் பார்க்கிறார்கள். இதனாலேயே சிலர் ‘ஒரே விலை’ என்று விற்கும் நிலையங்களில் நம்பிக்கையுடன் வாங்கிச் செல்வதைக் காணலாம்.

இலவசம் என்றாலேயே மக்கள் ஆர்வத்துடன் ஓடுவதைப் பார்க்கிறோம்.யாரோ ஒருவன் தன் நண்பனிடம் கேட்டானாம், “யானை வேண்டுமா?எனக்கா, யானையா? என்னை சமாளிக்கவே என்னால் முடியவில்லை. என்னால் குறைந்த அளவு ஒரு பூனையைக் கூடக் காப்பாற்ற முடியாது, எனக்கெதற்கு யானை?

இல்லை நண்பா, யாரோ யானைகளை இலவசமா, தருகிறார்களாம்!அப்படியா, அப்படியென்றால் எனக்கொன்று, என் அண்ணனுக்கு ஒன்று என்று இரண்டு யானைகளுக்கு ஏற்பாடு செய்இதுதான் இலவசம் என்ற சொல்லுக்கு உள்ள சக்தி. முன்னிலைப்படுத்துவோர்கள் தங்கள் பொருளை முன்னிலைப்படுத்த ஒரு பொருளை இலவசமாகத் தருவதாகக் கொள்ளுவோம்.

எடுத்துக்காட்டாக, ல கிரைண்டரை வாங்கினால், ஒரு ஊங வானொலிப் பெட்டி இலவசம் என்ற அறிவிப்பு வருகிறது. இன்னொரு நிறுவனம் தங்களுடைய வ கிரைண்டரை வாங்கினால் ஓர் டேப் ரெகார்டர் இலவசம் என்று அறிவிக்கிறது.

வாடிக்கையாளர் கணக்குப் போட்டுப் பார்த்து வ கிரைண்டர் வாங்கச் செல்லுகிறார். இதனால் ‘கிரைண்டர் எப்படிப்பட்டது’ என்பதைக் கூட ஆராயாமல் ‘இலவசமாக’ எது கிடைக்கிறதோ அது முக்கியம் என்ற உணர்வு தோன்றுவதைக் காணலாம்.சுருங்கக் கூறின் உங்கள் பொருளின் பெருமையைக் கூறி சந்தைப்படுத்துவதை விட, இலவசத்தைக் காட்டி விற்க வேண்டிய சூழ்நிலையை நீங்களே உருவாக்கி விட்டீர்கள். இது ஒருவகையில் உங்கள் பொருளுக்கு நீங்களே கொண்டுவரும் இழுக்கு.

விளம்பரங்கள் எல்லா இடங்களையும் சென்று அடைவதைப்போல முன்னிலைப் படுத்தும் முயற்சியை எல்லா நகரங்களிலும் செய்ய முடியாது. அதற்கான மனித சக்தியோ, நேரமோ, பணமோ நிறுவனங்களிடம் இருக்கும் என்று சொல்ல முடியாது.

எடுத்துக்காட்டாக ‘எக்ஸ்சேஞ் மேளா’வை எல்லா நகரங்களிலும் ஒரே காலத்தில் நடத்துவது இயலாத செயலாக இருக்கும்.எனவே, சரியான பயன்கள் விளையும் என்று சொல்ல முடியாது.பரிசுக் கூப்பன்கள் வழங்கும் போது சில நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன அல்லது பரிசுகள் தரமற்றவைகளாக உள்ளன.

சில சங்கங்களில் இத்தனை ஆயிரங்களுக்கு மேல் வாங்கினால் பரிசு என்று அறிவிக்கின்றன. ஆர்வத்துடன் சேரும் மக்கள் பலரால் அந்த இலக்கை எட்ட முடிவதில்லை. சோர்ந்து போய் விடுகிறார்கள்.

போட்டிகள் நடத்தும் போது, பரிசுகள் நியாயமாகத் தரப்படுகின்றனவா என்ற அச்சமும் எழாமல் இல்லை.இப்படிப் பல ஐயங்களும், குழப்பமும் இருந்தாலும் முன்னிலைப்படுத்துதல் என்பது இன்றைய வணிகச் சூழ்நிலைகளில் சந்தைப்படுத்தும் முயற்சியில் இன்றியமையாத ஒன்று.

சந்தைப்படுத்தப்படும் பொருள் தரமான தாகவும், அதற்கான முன்னிலைப்படுத்தும் முயற்சிகள் புதுமையாகவும், சலுகைகள் – போட்டிகள் நேர்மையாகவும், முயற்சிகள் தொடர்ந்தும் அமைந்தால் பொருளின் விற்பனை பல மடங்கு கூடும் என்பதில் ஐயமில்லை!

(வளரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *