தங்கவேலு மாரிமுத்து
வானம் தொடும்
வரத்தை
வாங்கி வந்தவன் நீ.
உன்னைப் பிடிக்காத சிலர்
உன்னைப் பிடிக்க
வலையை விரிக்கலாம்.
உன்னை ஒழிக்க
அம்பை எய்யலாம்.
உன்னை முடக்க
சிறகை நறுக்கலாம்.
ஆனாலும்
ஒன்று உணர்.
பறக்கப் பிறந்தவன் நீ
அதை
மறக்கப் பழகாதே.
பூமி
நீ புறப்படும் புள்ளி
வானம்
நீ வலம் வரும் பரப்பு.
இடரெத்தனை வரினும்
கடுகத்தனையளவும்
கலங்காதே
புலம்பாதே
உள்ளம்
ஒடுங்காதே.
உனக்கும் உண்டு
சிறகுகள்.
சிறகை விரி.
சீறிக் கிளம்பு.
சிகரம் தொடு.
சிகரம் தொடு.
ELANGOVAN
This poem is very very nice
edwin charles.k
பறவை பறக்க வேண்டும்!
ஒரு பறவையை குறித்து கூறுவது போல் இருக்கும் இந்த கவிதை என் மணதை பறக்க வைத்தது.நன்றி!!!