உயிரின் குணம்

– மரபின் மைந்தன் ம. முத்தையா விதைபோல் கனவு விழுகிறது வெளித்தெரியாமல் வளர்கிறது எதையோ பருகி நிமிர்கிறது என்றோ வெளியே தெரிகிறது! எண்ணமும் வேர்களில் நீர்வார்க்கும் எத்தனம் வளர்ச்சியை சரிபார்க்கும் மண்ணில் பெற்றவை உரமானால் மிக நிச்சயமாய் பூப்பூக்கும்!

முயற்சி வேண்டும்

– டாக்டர் கவிஞர் ராஜ்கவி அசையாமல் நீயிருக்க யோகியுமல்ல! அப்படியே உட்காரப் பாறையுமல்ல! திசையாவும் திரிகின்ற பறவையைப் பார் நீ! திரிந்தலைய அதன்தேவை கோடி செல்வமா? விசைவேண்டும் நம்முடற்கு வீணில் கிடப்பதா? வேலையொன்றும் செய்யாமல்

மனிதம் வாழ்க!

காலத்தால் பண்படுதல் மனித நீதி கருணைதான் நீதிக்குள் குலவும் சோதி கோலங்கள் மாறுகையில் திட்டம் மாறும் கொள்கைகள் வளர்கையிலே சட்டம் மாறும் வேலெடுத்து நாட்டியதும் வீரம் அன்று வெண்கொடியைக் காட்டுவதும் விவேகம் இன்று நூலறிவும் நுண்ணறிவும் வளரும்போது நேற்றிருந்த சட்டங்கள் இன்றைக்கேது?

பயம்கொள்ளாமல் இயங்கு

மின்னல் கிழித்த கோடுக ளெல்லாம் மழையின் கோலங்கள் ஆகும் செந்நெல் செழித்த வயல்களின் நடுவே தென்றல் கோலங்கள் போடும் தன்னில் பிறந்த எண்ணக் கோடுகள் சிந்தனைக் கோலங்கள் ஆகும் இன்னும் இன்னும் உள்ளே அமிழ எண்ணங்கள் இமயம் ஆகும்!

உறியடி வாழ்க்கை

– மரபின் மைந்தன் ம. முத்தையா குறிக்கோள் நோக்கிப் பயணம் போகையில் கனவுகள் குதிரைகள் ஆகும் குதிரையை சுண்டிக் கிளம்பிடு தோழா கருதிய எதுவும் கைகூடும் மறிக்கும் தடைகளை அகற்றும் சக்தி மனிதனின் கனவுக்குண்டு மயக்கம்- தயக்கம் முற்றிலும் நீக்கி முயன்றால் வெற்றிகள் உண்டு

நாளையென்ன தேடு?

-மரபின் மைந்தன் ம. முத்தையா கோடையென்றும் குளுமையென்றும் பருவநிலை மாறும் வாடிநின்ற நிலைமையொரு வீச்சினிலே தீரும் தேடுவதை எட்டும்வரை தொடர்ந்திருக்கும் பாடு

வானம் வழங்கும் பாடம்

– மரபின் மைந்தன் முத்தையா சூரிய வாளியில் வெய்யிலை நிரப்பி சூட்டைத் தெளிக்குது வானம் காரியம் இதனைப் பார்த்துக் கொண்டே காத்துக் கிடக்குது மேகம் பேரிகை போல இடியை முழக்கிப் பொழிய நெருங்குது நேரம் வீரியம் வளர்த்து வேளை வருகையில் வீசியடிப்பதே ஞானம்!

வாக்குச் சீட்டு

ஏரிகள் நதிகள் குளங்களுக்கெல்லாம் வான்மழைத் துளிகள் வாக்குச்சீட்டு! பேரலை வீசும் சமுத்திரத்துக்கோ ஆறுகள் எல்லாம் வாக்குச்சீட்டு! தூரிகை தீண்டும் வண்ணங்களெல்லாம் ஓவியன் கைகளில் வாக்குச்சீட்டு! காரியம் நிகழ்த்தும் வல்லமை- நமக்கு நாமே வழங்கும் வாக்குச்சீட்டு!

உருட்டிய தாயத்தின் எண்ணிக்கை

உருட்டிய தாயத்தின் எண்ணிக்கை ஒவ்வொரு தடவையும் கலந்துவரும் விரட்டிய பாம்பால் விழுந்தவரும் ஏணியில் ஏறவே பரமபதம்! தோற்பதும் வெல்வதும் தொடருவது தொடக்கத்தில் யாருக்கும் இருப்பதுதான் ஆட்டத்தின் சூட்சுமம் விளங்கிவிட்டால் அதன்பின்னர் வெற்றி தொடர்கதைதான்!

இல்லா உரிமை

– மரபின் மைந்தைன் ம. முத்தையா வீணையை உறையிட்டு மூடிவைத்தும் வீணை என்பதை வடிவம் சொல்லும்! பூணும் உறையினுள் வாளிருந்தும் புரிபடும் வாளென்று…பார்த்ததுமே!