டீ.வி.பார்க்காத கடவுள்

posted in: தொடர்கள் | 0

அமெரிக்கப் பள்ளி ஒன்றில், மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம், அவர்கள் புரிந்து கொண்ட கடவுளைப் பற்றி எழுதச் சொன்னார்கள். எட்டு வயதான டேனி டட்டன் என்ற குழந்தை என்ன எழுதியது தெரியுமா?

“கடவுளின் முக்கியமான வேலைகளில் ஒன்று, மனிதர்களைப் படைப்பது. கடவுள் பெரியவர்களைப் படைப்பதில்லை. குழந்தைகளைத்தான் படைக்கிறார். சின்னச் சின்ன அங்கங்களை உருவாக்குவது அவருக்கு எளிதாக இருக்குமில்லையா? அதற்காக! ஆனால் குழந்தைகளுக்கு நடக்கவும் பேசவும் கற்றுத்தர கடவுளுக்கு நேரமில்லை. அதனால் அம்மா அப்பாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டார்.

ஏசு, கடவுளின் குழந்தை. அவரும் குழந்தைக் கடவுள். அவருக்கு அண்ணா கடவுளோ தம்பிக் கடவுளோ இல்லை. தனியாகவே இருக்கிறார்.

அம்மா அப்பாவால் நம்முடன் எல்லா இடங்களுக்கும் வரமுடியாது. ஆனால், கடவுளால் நம் கூடவே வரமுடியும். அதனால், யாராவது கடவுளை நம்பாவிட்டால் அவர்கள் எல்லா இடங்களுக்கும் தனியாகவே போக வேண்டியது தான்! கடவுள் எப்போதும் நம் பிரார்த்தனைகளைக் கேட்டாக வேண்டும். அதனால் அவர் ரேடியோ கேட்கவோ, டீ.வி. பார்க்கவோ நேரமில்லை.

கடவுளுக்கே புரியாத புதிர்கள்!

மனிதர்களைப் பற்றி கடவுளுக்கே புரியாத விஷயங்கள் இரண்டு. இது கடவுளுடனான ஒரு கற்பனைப் பேட்டியில் வெளிவந்தது.

குழந்தைகளாக இருக்கும்போது பெரியவர்களாக வேண்டும் என்று அவசரப் படுகிறார்கள். பெரியவர்களான பிறகு, குழந்தைகளாகவே இருந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
உடல் நலன் பற்றிக் கவலையே இல்லாமல், பணம் சம்பாதிக்க அலைகிறார்கள். பணம் சம்பாதித்த பிறகு அதனை உடல் நலனுக்காக செலவிடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *