கான்பிடன்ஸ் கார்னர் : 6

நெடுநாளுக்குப் பின் சந்தித்த உறவினர் ஒருவர் கேட்டார், “ஏன் சோகமாயிருக்கிறீர்கள்?” இவர் சொன்னார், “மூன்று வாரங்களுக்கு முன் என் தாத்தா இறந்தார். அவரது சொத்து ஐம்பது லட்சம் எனக்கு வந்தது” பிறகு ஏன் சோகம் –

“இரண்டு வாரங்களுக்குமுன் இன்னொரு தாத்தா இறந்தார். – அவரது சொத்து முப்பது லட்சம் கிடைத்தது — அடடா! பிறகென்ன உங்களுக்கு – – போன வாரம், திருமணமாகாத என் பெரியம்மா இறந்தார் – நாற்பது லட்சம் கிடைத்தது” – அப்படியானால் ஏன் சோகமாயிருக்கிறீர்கள்?

“இல்லை! இந்த வாரம் முடியப் போகிறது. சொத்துள்ள என் சொந்தக்காரர்கள் யாருமே சாக வில்லை” “அப்படியா – – என் அனுதாபங்கள்” வந்தவர் நடந்தார். தன் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தைத் தர வந்த மனிதர் அவர். இவரது அணுகுமுறைபார்த்து அகன்றார். “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *