1. அளப்பெரிய அன்பும் மிகப்பெரிய சாதனைகளும் அத்தனை எளிதானவை அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள்.
2. இழப்புகள் ஏற்படும் வேளைகளில் அந்த இழப்புகள் தரும் பாடங்களை இழந்து விடாதீர்கள்.
3. ஒரு மனிதனுக்கு 3 விஷயங்கள் முக்கியம் சுயமரியாதை – பிறருக்குத் தரும் மரியாதை – தன் செயல்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுதல்.
4. நீங்கள் விரும்பிய ஒன்று கைநழுவிப் போவது சில நேரம் உங்கள் அதிர்ஷ்டத்தின் விளைவாகவும் இருக்கலாம் என்று புரிந்து கொள்ளுங்கள்.
5. விதிகளை உடைப்பதாயிருந்தால் கூட அவற்றை விழிப்புணர்வுடன் கற்றுக் கொள்ளுங்கள்.
6. சிறிய அளவிலான கருத்து வேற்றுமை, சிறந்த உறவுகளை சிதைத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
7. தவறு செய்திருப்பதாகத் தெரிந்தால் அதனை உடனே திருத்திக் கொள்ளத் தேவையானதை செய்யுங்கள்.
8. ஒவ்வொரு நாளும் சிறிது நேரத்தைத் தனிமையில் செலவிடுங்கள்.
9. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அதற்காக உங்கள் அடிப்படைப் பண்புகளில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.
10. சில சிக்கலான கேள்விகளுக்கும் சிரமமான சூழல்களுக்கும் மவுனமே சிறந்த பதில் என்பதை மறவாதீர்கள்.
11. பெருமிதமான வாழ்வை வாழுங்கள் முதுமையில் அதனை நினைத்துப் பார்க்கையில் இரண்டாம் முறையாக அந்த ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள்.
12. உங்கள் குடும்பத்தில் திகழும் அன்பு மயமான சூழல்தான் உங்கள் வாழ்வின் அடித்தளமாகும்.
13. நெருக்கமானவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்போது நடப்பிலுள்ள விஷயங்களை மட்டுமே விவாதியுங்கள். கடந்து போன விஷயங்களை மீண்டும் விவாதத்திற்குள் கொண்டு வராதீர்கள்.
14. உங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மரணத்தற்குப் பிறகும் வாழ அதுவே சிறந்த வழி.
15. இந்த பூமியை மென்மையாய்க் கையாளுங்கள்.
16. ஆண்டுக் கொருமுறை, இதுவரை போகாத இடம் ஒன்றிற்குப் போய் வாருங்கள்.
17. எந்த ஒருவருடனான உறவில், ஒருவருக்கான இன்னொருவரின் தேவையைக் காட்டிலும், ஒருவருக்கான இன்னொருவரின் அன்பு அதிகமாய் இருக்கிறதோ, அதுவே மிகச் சிறந்த உறவு.
18. உங்கள் வெற்றியை அளக்க சரியான வழி, அந்த வெற்றியை எட்ட எதனை இழந்தீர்கள் என்று பார்ப்பதுதான்.
19. பிறர்மீது நீங்கள் காட்டும் அன்பு, பிறருக்காக நீங்கள் சமைக்கும் உணவு, இரண்டிலும் தாராளம் காட்டுங்கள்.
Leave a Reply