“ஆசிரியர் நடத்தும் பாடத்தை எல்லோரும்தான் கவனிக்கிறோம். சிலர் மட்டும் நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். சிலர் சுமாரான மதிப்பெண் பெறுகிறார்கள். சிலர் தோல்வியடைகிறார்களே…. எப்படி?” கேள்வி எழுப்பினான் மாணவன். ஆசிரியர் சொன்னார், “கவனிப்பது மூன்று வகை.
கொதிக்கும் பாத்திரத்தில் விழுகிற மழைத்துளி ஆவியாகிவிடுகிறது. தாமரை இலைமேல் விழும் மழைத்துளி அலங்காரமாக மட்டுமே இருக்கிறது. சிப்பிக்குள் விழுகிற மழைத்துளிதான் முத்தாக மாறுகிறது. சிப்பியாய் இருப்பவர்கள் நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். தாமரையாய் இருப்பவர்கள் சுமாரான மதிப்பெண் பெறுகிறார்கள். கொதிக்கும் பாத்திரமாய் இருப்பவர்கள் தோல்வியடைகிறார்கள்” என்றார் ஆசிரியர்.
Leave a Reply