நல்ல நோக்கம் ஒன்று நிலையான சாதனைக்கு அடித்தளமாய் அமைகிறது. காது கேளாதவர்களுக்குத் துணைசெய்யும் நோக்கில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர் அதன் நீட்சியாகத் தொலைபேசியைக் கண்டு பிடித்தார்.
அலெக்ஸாந்தர் கிரஹாம்பெல் ஓர் ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல. தீர்க்கதரிசியும்தான். தொலைபேசி கண்டுபிடித்த பிறகு தன் தந்தைக்கு அவர் எழுதிய கடிதத்தில், “தண்ணீர் இணைப்பு எரிவாயு இணைப்பு போல என் தயாரிப்பு வீட்டுக்கு வீடு இடம்பெறும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு கனவு – ஒரு கண்டுபிடிப்பு இரண்டுக்கும் பயன் கருதாத அணுகுமுறையே பாதையிட்டது.
Leave a Reply