இலங்கையில், அப்பாவித் தமிழர்கள் மீது நல்க்கும் தாக்குதலும், அவர்களின் வாழ்வுரிமைக்கு பாதிப்பு விளைவிக்கும் நடவடிக்கைகளும் வருந்துதற்குரியவை. இந்திய அரசின் குரல் இன்னும் உறுதிபட ஒலித்து, போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்க வேண்டும்.
இந்திய மண்ணில் தங்கள் வேர்களைக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் உயிர், உடமைகளுக்காக குரல் கொடுப்பது என்பதும் இன்னோர் அரசின் இறையான்மையில் தலையிடுவது என்பதும் இருவேறு அம்சங்கள்.
இரண்டும் ஒன்றுபோல் தோற்றமளிக்கும் விதமாய் அதிகார மையங்கள் அளிக்கும் விளக்கங்கள் கேள்விக்குரியவை. உலகின் ஒட்டுமொத்த கவனத்தை இலங்கையின்பால் திருப்பி தீர்வுக்கும் அமைதிக்கும் வழிதேடும் பணிக்கு இந்தியா தலைமை தாங்க வேண்டும்.
ramesh
where do i get this magazine in chennai