நம்பிக்கை பிறவிக்குணமா? பயிற்சியின் பரிசா?

– சினேகலதா

மனிதனின் செயல்பாடுகளுக்கு எல்லாம் உந்துசக்தியாய்த் திகழ்வது, வெளியிருந்து வரும் வாய்ப்புகளையும், வாழ்த்துகளையும், வார்த்தைகளையும்விட, மனிதனுக்கு ஏற்படும் உள்ளுணர்வுகள்தான். அந்த வாய்ப்பை அடையாளம் கண்டு, “இதை நழுவ விட்டுவிடாதே” என்று மனிதனைத் தூண்டி செயல்படச் செய்வதும் அந்த உள்ளுணர்வுதான்.

உள்ளுணர்வுகள் மனிதனின் செயலுக்கு மட்டுமல்ல – மனிதனின் வெற்றிக்குக் காரணமான எண்ணங்களுக்கும் வலிமை சேர்க்கிற அற்புதத்தைச் செய்கிறது.

ஆசை, கோபம், எரிச்சல், நட்பு, அன்பு என்று மனிதனுக்கு எத்தனையோ உணர்வுகள் தோன்றலாம். ஆனால் மனித உணர்வுகளிலேயே வலிமையானதும் உள்ளுணர்வோடு நேரடி இணைப்பு கொண்டதுமான உணர்வு என்ன தெரியுமா? நம்பிக்கைதான்.

வெற்றி பெறும் வேளையில் மட்டுமல்ல. தோல்விகளை எதிர் கொள்ளும் நேரங்களில்கூட எல்லா மனிதர்களுக்குள்ளும் நம்பிக்கைதான் முதல் துளிர்க்கிறது.

எவ்வளவு மோசமான சூழலும் அதிருந்து வெளியேறவேண்டும் என்கிற தவிப்பு தோன்றுகிறதே, அதுதான் நம்பிக்கையின் முதல் துளிர். விலங்குகளைப் பொறுத்தவரை இது வெறும் உந்துதல், வலையில் மாட்டிக் கொண்ட விலங்குக்கு துள்ளவும், முட்டி மோதவும்தான் தெரியுமே தவிர அறிவுபூர்வமாக யோசிக்கவோ யாரையாவது அழைத்து உதவி கேட்கவோ தெரியாது.

ஆனால் மனிதன், வலையில் மாட்டிக்கொண்ட சிங்கத்தின் கதையை எழுதுகிறபோது, அந்த சிங்கம் முன்னர் ஓர் எக்கு உதவியதாகவும், அந்த எ, சிங்கத்தின் வலையை அறுத்து தப்பிக்கச் செய்ததாகவும் எழுதுகிறான். தொடர்புகளின் துணை கொண்டு, ஒரு சிக்கல் இருந்து மீள்வதற்கு மனிதன் அறிவுபூர்வமாக யோசித்துப் பழகியிருப்பதால், அதையே விலங்கின் மீது ஏற்றி ஒரு கதையாக்குகிறான். மனிதனின் உள்ளுணர்வு, நம்பிக்கையோடு நேரடித் தொடர்பு கொண்ட ஒரு விஷயம். எந்த உள்ளுணர்வை நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஊக்குவிக்கிறீர்களோ, அது உங்கள் இயல்பாகவே பலம் பெறுகிறது. குழந்தையாக இருக்கும்போது ஊசி போட எல்லோருக்குமே பயம். சிலர் கடைசி வரைக்குமே ஊசி என்றால் கண்மூடித்தனமாக பயந்துகொண்டே இருக்கிறார்கள். பலருக்கு அறிவு முதிரும்போது, நோயின் கொடுமையிருந்து விரைவில் விடுபட ஊசியே உகந்த வழி என்று தெரிகிறது. எனவே ஊசி பற்றிய அச்சம் அகன்று அறிவுபூர்வமாக முடிவெடுக்க முடிகிறது.

எந்த ஒன்றின் மீதும் கண்மூடித்தனமான அச்சமோ ஒவ்வாமையோ இருந்தால், அது வளர்ச்சிக்குத் தடையாகத்தான் இருக்கும். அனுபவமும் அறிவும் சேர்ந்து நம்பிக்கையாக வடிவமெடுக்கும்போது, ஊசி தொடங்கி உலக விஷயங்கள் வரை, நீண்டகால நன்மையை மனதில்கொண்டு செயல்படமுடியும்.

உள்ளுணர்வும் அறிவும் ஒன்று சேரும்போது, அது நம்பிக்கையாக வடிவெடுக்கிறது. நம்பிக்கைதான் மனித உணர்வுகளிலேயே வமையானது என்று உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். தசைகளை வலிமையாக்க உடற்பயிற்சி மேற்கொள்வது போல, மனப்பயிற்சி மூலம் நம்பிக்கை என்ற உணர்வை உங்கள் உள்ளுணர்வின் ஓர் அங்கமாகவே ஆக்கிக்கொள்ள முடியும்.

உங்கள் கனவுகளை நீங்களே நம்புவது, அந்தக் கனவுகளை நனவாக்க உங்களுக்குத் தகுதி இருப்பதை நம்புவது, உங்களுக்கிருக்கும் தொடர்புகளின் துணைகொண்டு அந்தக் கனவுகள் நனவாகத் தொடர்ந்து உழைப்பது ஆகியவை உங்களை நம்பிக்கையின் வடிவமாகவே செதுக்கும். ஏனெனில் நம்பிக்கை என்பது பிறவிக்குணமல்ல. பயிற்சியும் விடாமுயற்சியும் நேர்மறை எண்ணங்களும் இருந்தால் எவருக்கும் இது சாத்தியம்.

நம்பிக்கையை அறிவும் உயர்வும் சங்கமிக்கும் வலிமைமிக்க ஆயுதமாய் வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைத்தவை எல்லாம் நிஜமாவதை நீங்களே உணர்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *