சீனாவில் ஓர் அரசர் இருந்தார். அவர் ஓர் ஓவியர். நாட்டின் தலைசிறந்த ஓவியரைக் கொண்டு தன்னிகரில்லாத ஓவியம் ஒன்றை வரையச் சொன்னார். மூன்றாண்டுகளில் அந்த ஓவியம் உருவாகியது. ஒரு வனப் பகுதிக்குள் செல்கிற ஒற்றையடிப் பாதையின் அந்த ஓவியம் அவ்வளவு தத்ரூபமாகவும்
ஈடுசொல்ல முடியாததாகவும் உருவாகியது. அதன் அழகில் மூழ்கிய அரசர், ஓவியரைப் பார்த்து, “இந்தப் பாதை எங்கே போகிறது” என்று கேட்க, “வாருங்கள் பார்த்துவிடுவோம்” என்று ஓவியர் சொல்ல, இருவரும் இறங்கி ஓவியத்திற்குள் நடந்து, அதிருந்து வனத்திற்குள் தொலைந்தார்களாம். மிகச் சிறந்த உருவாக்கம் ஒன்றில், அதனை உருவாக்கியவரும் அதில் ஈடுபட்டவரும் முழுவதாகக் கரைந்து விடுவார்கள் என்பதை இந்தக் கதை நமக்குச் சொல்கிறது.
Leave a Reply