- உங்களைச் சுற்றி மலரும் புன்னகை
உங்களைப் பற்றி நெருங்கும் நண்பர்கள்
நீங்கள் பழகும் மனிதர்களின் தரம்
உங்களுக்கு இருக்கும் சிந்தனை வளம்
நீங்கள் உறுதியாய் பின்தொடரும்கனவுகள்
நீங்கள் பரப்பும் அன்பின் உணர்வுகள் - மற்றவர் மனதில் நீங்கள் விளைக்கும் தாக்கம்
சோர்ந்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஊக்கம்
கலந்து பழகும் கனிந்த இயல்பு
முடிவெடுப்பதில் இருக்கிற தெளிவு
வேண்டாதவற்றை விளக்கும் துணிவு
சொல்லில் செயலில் வெளிப்படும் பணிவு - உதவி செய்வதில் காட்டும் நாட்டம்
செயல்படுவதில் இருக்கும் வேகம்
குறிக்கோள்விட்டு விலகாத கவனம்
தோல்விகள் வருகையில் தளராத இதயம்
சமரசம் செய்யாத இலட்சியப் பிடிப்பு
முயற்சியைக் கைவிடாத முழு முனைப்பு - இருப்பதைப் பகிர்ந்து கொடுக்கிற உள்ளம்
தேவைக்கு அளவாய்த் தேடும் செல்வம்
மரத்துப் போகாத மனிதப் பண்பு
சுயநலம் இன்றி சுடர்விடும் அன்பு
பொதுநலன் கருதி உழைக்கும் பரிவு
குறுக்கு வழியில் இயங்காத அறிவு!
Leave a Reply