நமக்குள்ளே

தலைவராக தகுதி உள்ளவர்கள் இன்று எப்படி இருக்க வேண்டும் என்று ரத்தினச்சுருக்கமாக அட்டைப்பட தலையங்கத்திற்கு கடைசிப்பக்கத்தில் விடை அளித்து விட்டார் அத்வைத் சதானந்த். ஆம் இப்ப எல்லோரும் தலைவராக தயாராக இருக்கோம்.
தங்கபரமேஸ்வரன், திட்டக்குடி.

ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தரங்கமான நட்பாய் அன்றும் இன்றும் புத்தகங்களே இருக்கின்றன. நின்று, நிதானித்து, நெறிபட உரையாட புத்தகங்கள்போல் உற்ற துணை பூமியில் இல்லை என்னும் வரிகளில் புத்தகங்களின் சிறப்பினை விவரித்த ‘புத்தகக் காதல்’ நமது பார்வை மடல் மிக அருமை.
சூரியதாஸ், சிலட்டூர்

வில்மாவின் வெற்றிக்கதை……யப்பப்பா இவரது கடின உழைப்புக்கு இருபது வயதிலேயே உலகத்தை இவர் பக்கம் இழுத்து பார்வையை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். அவருக்கு உதவிய அவரது தாயை நினைக்கும்போது இப்படியொரு தாய் நமக்கும் இல்லையே என்ற ஏக்கம் வருகிறது. மரபின்மைந்தன் கட்டுரை சிலிர்ப்பூட்டிவிட்டது. நன்றி.

ப.அபிநயா யாழினி – சின்னகொசப்பாளையம்.

நமது நம்பிக்கை முதல் பக்கத்தில் படித்த புத்தகக் காதல் வித்தியாசமான தலைப்பைப் பார்க்க நேர்ந்தது. நம்பிக்கை ஊட்டுவது ஒருவர்க்கு வெற்றி நோக்கி பயணாக்கும் முயற்சி. ஒரு மனிதருக்கு மிக முக்கியமானது எல்லாதுறை வல்லுநர்களிடம் இருக்க வேண்டியது ஆளுமைத்திறமை. இதனை பிப்ரவரி மாதத்தில் முக்கிய குறிக்கோளாக எடுத்தாண்ட முறை மிகவும் அருமை. ஞாபக வேர்களுக்கு நீரூற்று கட்டுரை நல்ல அனுபவத்தைத் தருகிறது.

அவரவர் கடமை, பண்பாடு எனும் அடையாளம் வாஸ்கோடகாமாவின் வழிகாட்டி கட்டுரைகள் இதழை மேன்மேலும் வலுப்படுத்துகிறது. கிருஷ்ண வரதராஜன் அவர்களின் கருத்துக்கள் வேறுபட்ட அறிவை உண்டாக்குகிறது. பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்களின் தருவதையே பெறுகிறார்கள் போன்ற வெற்றிவாசல் விழா சிறப்புக் கருத்துக்களை தனியாக ஒரு நூலாக வெளியிடலாம். நன்றி!

ஏ.ரேவதி, ஓமலூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *