‘உங்களை அச்சு அசலாய் வரைந்து தருகிறோம்” என்ற அறிவிப்புப் பலகை பார்த்துக் கூட்டம் அலை மோதியது. உள்ளே போனவர்கள் ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு நிலைக் கண்ணாடி தரப்பட்டது. கொந்தளித்த கூட்டத்தை அமைதிப்படுத்திய அதன் உரிமையாளர் சொன்னார், “உங்கள் மாற்றங்களை நீங்கள் உடனுக்குடன் உணர
நிகழ்காலத்தின் மனசாட்சியாய் நிற்பதுதான் கண்ணாடி. ஓவியம் வரைந்து முடித்த விநாடியிலேயே அது கடந்த காலத்தின் பதிவாகி விடுகிறது. நிகழ்காலத்தின் நிமிஷமே நீங்கள். இந்த நிலைக்கண்ணாடி அதற்குத்தான்” என்றார் அவர். விநாடிக்கு விநாடி வாழ்வைக் கண்காணியுங்கள்! வெல்வீர்கள்!
Leave a Reply