தன் பிறந்த நாளுக்கு, தானே கைப்பட செய்த பைகளையும் அலங்காரப் பொருட்களையும் கொண்டுபோய் முதியோர் இல்லங்களில் விநியோகிப்பது அந்த இளம்பெண்ணின் வழக்கம். அந்த ஆண்டு குழந்தை பிறந்திருந்தது. எனவே, கைப்பைகள் செய்ய நேரமில்லை, ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்றெல்லாம் யோசித்த போது வேறொன்று தோன்றியது. முதியோர் இல்லத்திற்குத் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போனாள் அந்தப்பெண்.
அரும்பின் வருகையைப் பழுத்த பழங்கள் கொண்டாடின. எல்லோரும் குழந்தையைக் கொஞ்சித் தீர்த்தார்கள். நம்மிடம் இருப்பதிலேயே விலைமதிப்பில்லாததை மற்றவர்களுடன் பகிர்ந்தால் வருகிற மகிழ்ச்சி எல்லையில்லாதது. அது பொருளானாலும் சரி. பிள்ளையானாலும் சரி.
Leave a Reply