வன்முறை இல்லாத வல்லரசு
வல்லரசுக் கனவுகள் ஒருபுறம் – வன்முறை நிகழ்வுகள் மறுபுறம். ஆதாயத் தொழில்கள் ஒருபுறம் – ஆட்குறைப்பும் நிதிநெருக்கடியும் மறுபுறம். இந்தியனின் வல்லரசுக் கனவின் வேர்களை அசைக்கும் விதமாய் இந்த முரண்பாடுகள் முள்ளாய் உறுத்துகின்றன.
குழு மனப்பான்மையும் குரோதமும் எவ்வித வளர்ச்சிக்கும் வழிதராது.
சட்டக் கல்லூரி மோதலை மறக்கடிக்கும் விதமாய் நீதிமன்றவளாகத்தில் நடந்த மோதல் கவலையளிக்கிறது அறிவுத் தெளிவும் அதிகாரப் பொறுப்பும் வாய்ந்தவர்கள் மத்தியில் விளையும் இத்தகைய மோதல்கள் குடிமக்களின் நம்பிக்கையை நலியச் செய்யும்.
பொருளாதார அளவிலான பின்னடைவுகளால் உலகமே சோர்ந்திருக்கும் வேளையில் எல்லோரும் ஒன்றுகூடி வளர்ச்சிப் பாதையில் வழிநடத்த வேண்டிய நேரமிது. வழிநடத்த வேண்டியவர்களே வழிமாறலாகாது.
Leave a Reply