கான்பிடன்ஸ் கார்னர் – 3

ஓர் அரசனின் விருந்தில் கலந்துகொள்ள விரும்பிய பிச்சைக்காரன் முன் ஒரு தேவதை தோன்றி அழகான ஆடை ஒன்றைப் பரிசளித்ததுடன், இந்த ஆடை எப்போதும் அழியாது என்ற வரமும் கொடுத்தது. ஆனாலும் பிச்சைக்காரனுக்கு, தன்னுடைய ஒரே கந்தல் ஆடையை இழக்க மனமில்லை. அதையும் மூட்டையாகக் கட்டிக்கொண்டு அரச விருந்துக்குப் போனான். அணிந்திருந்த ஆடை கண்டு அனைவரும்

வரவேற்றனர். அந்த ஆடை தினமும் புதிதாய்த் தோன்றியது. சந்தேகத்தால் கந்தை மூட்டையை பிச்சைக்காரன் விடவில்லை. ராஜ உடையுடன் உலவினாலும் அவன் ஏந்திய கந்தல் மூட்டையே அவன் அடையாளம் ஆனது. நம் பலவீனங்களை நாம் விடாதவரை எந்த வளர்ச்சியும் பயன்தராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *