தான் அழகில்லை என்ற தாழ்வு மனப்பான்மை அந்தப் பெண்ணுக்கு. உணவகம் ஒன்றில் ஒரு தோழிக்காகக் காத்திருந்தார். மற்றவர்கள் பார்வையில் படுவதில் அவளுக்கு மிகுந்த கூச்சம். நகம் கடித்து, நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தார்.. தூரத்து மேசையில் அமர்ந்திருந்த ஒருவர் பார்த்துக் கொண்டேயிருந்தார். பணிப்பெண்ணை அழைத்து ஏதோ சொன்னார். அதற்குள் அந்தப் பெண்ணின் தோழியும் வந்து சேர்ந்தார். சாப்பிட்டு
முடித்ததும் பில் கேட்டார்கள். ஒருவர் பணம் கொடுத்துவிட்டு ஒரு குறிப்பையும் தரச் சொன்னதாய்ப் பணிப்பெண் சொன்னார். அதில், “பெண்ணே! உன் கண்கள் ஒளி நிரம்பியவை. உன் புன்னகை கவர்ச்சியானது. நிமிர்ந்து இந்த உலகைப்பார். மலர்ந்து சிரி. நீ இந்த உலகை அழகாக்கப் பிறந்தவள் ” என்றிருந்தது. அந்த துண்டுச்சீட்டு தந்த நம்பிக்கை அந்தப் பெண்ணின் வாழ்வையே மாற்றியது. இதயம் உடைந்தவர்களுக்கு இதம் செய்வதுதானே வாழ்க்கை.
Leave a Reply