அந்த முனிவரின் ஆசிரமத்திற்குள் அதிகார வெறிபிடித்த அரசன் நுழைந்தான். வாசலிலேயே தவத்தில் இருந்த முனிவரைப் பார்த்து, “முனிவரே வணக்கம்” என்றான். முனிவர் கண் திறக்கவில்லை. குரலை உயர்த்திப் பலமுறை வணக்கம் சொன்னான். கண் திறந்த முனிவர், “சத்தம் போடாதே ! பறவைகள் பயப்படும்” என்றார். கோபத்தில் அரசன் வாளை உருவ ஆயிரக்கணக்கான
பறவைகள் சூழ்ந்து அரசனைக் கொத்தத் தொடங்கின. அவற்றை அமைதிப்படுத்திய முனிவர், “அரசனே! அதிகாரம் செலுத்துவதில் நீ பிரியம் வைத்திருக்கிறாய். ஆனால், அன்பு காட்டுவதன் அதிகாரத்தை நீ அறியவில்லை. பறவைகள் என் அன்புக்குக் கட்டுப்பட்டன. அன்பால் பெறும் வெற்றியே வெற்றி” என்றார். அன்று மாறினான் அரசன்.
Leave a Reply