அதிக லாபம் தரும் முதலீடுகள் பாதுகாப்பானவையா?

நேர்காணல்

நிதி ஆலோசகர் திரு. நல்லசாமி அவர்களுடன் நேர்முகம்

நிதி ஆலோசகர்’ என்பது பெரிய பெரிய நிறுவனங்களில் உள்ள பதவி. இத்தகைய ஆலோசகர்கள் தனிமனிதர்களுக்குத் தேவையா என்ன?

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப பல்வேறு கால கட்டங்களில் தேவைகள் மாறுபடும். இதன் அடிப்படையில் அவர் தன் எதிர்கால தேவைகளை திட்டமிட வேண்டியுள்ளது. ஓர் இளைஞர் தன் வாழ்க்கையில் சுமார் 30-லிருந்து 35 வருடங்கள் வரைதான்

திறமையாக பொருள் ஈட்ட முடிகிறது. இதனைக் கொண்டு தன் சராசரி வாழ்நாளில் தேவைப்படும் பல்வேறு குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. உதாரணமாக குழந்தைகளின் படிப்பு, வீடு கட்டுதல், குழந்தைகளின் திருமணம், தனது ஓய்வுக்கால மருத்துவ செலவுகள் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்கு தேவையான பொருளாதாரத்தை திட்டமிட வேண்டியுள்ளது. ஆகவே ‘நிதி ஆலோசகர்’ என்பவர் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, தனி நபர்களின் நிதி நிர்வாக ஆலோசனைகளையும் பூர்த்தி செய்கிறார்.

ஒரு இலட்சமோ இரண்டு இலட்சமோ வைத்திருப்பவர்கள் கூட நிதி ஆலோசனை பெறமுடியுமா?

நிதி நிர்வாகத்தைப் பொறுத்தவரை பெரிய தொகை வைத்திருப்பவர்களுக்குத்தான் தேவை என்பது தவறான கூற்று. ஒரு இலட்சமோ இரண்டு இலட்சமோ வைத்திருப்பவர்களுக்கும் அல்லது மாதா மாதம் சிறிய தொகையை முதலீடு செய்பவர்களுக்கும் நிதி ஆலோசனை என்பது தேவையான ஒன்று. நிதி மேலான்மை என்பது நிண்ட கால திட்டமிடுதல் ஆகும்.

காப்பீடு பாலிசிகளைத் தேர்வு செய்வதில் என்ன அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்?

காப்பீடு பாலிசிகளைத் தேர்வு செய்வதில் பொதுவான அணுகுமுறை கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கால கட்டங்களில் தேவைகள் மாறுபடும். ஒரு லட்சம், 5 லட்சம் மற்றும் 10 லட்சம் காப்பீடு என்று சில முகவர்கள் கூறும் வார்த்தைகள் பொருந்தாது. காப்பீட்டுத் தேவை ஒருவரின் வயது, வருமானம், கடன், குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டிய ஒன்று. பங்ழ்ம் டப்ஹய் என்ற காப்பீடு மற்றும் தரக்கூடிய மிகக் குறைந்த பிரீமிய பாலிசிகள் தற்போது அனைத்து நிறுவனங்களிலும் உள்ளது. அதுபோலவே குழந்தைகளின் படிப்பு, ஓய்வுக்கால பலன் சார்ந்த ஒவ்வொரு தேவைக்கேற்ப காப்பீட்டுத் திட்டங்கள் எல்லா நிறுவனங்களிலும் உள்ளன.

நிலத்திலும் தங்கத்திலும் பணத்தைப்போடு என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. இது இன்றும் பொருந்துமா?

நிலத்தில் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது எல்லா கால கட்டத்திலும் சிறந்த முதலீட்டு முறைகளாக கடைப்பிடிக்கப் படுகின்றன. முதலீட்டுக் காரணங்களுக்காக தங்கத்தை சேகரிக்கும் பொழுது, அவற்றை ஆபரணங்களாக வாங்கும் பொழுது செய்கூலி, சேதாரம் என்று ஒரு கணிசமான தொகையை, வாங்கும்போதும், விற்கும்போதும் இழக்க வேண்டி வரும். தற்போது எர்ப்க் உஷ்ஸ்ரீட்ஹய்ஞ்ங் பழ்ஹக்ங்க் ஊன்ய்க்ள் (எஞகஈ உபஊ) எனப்படும் முறையில் முதலீடு செய்யப்படும்போது உதாரணமாக ஒரு கிராம் யூனிட்களாக மாற்றப்பட்டு 24 கேரட் தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்யப்படுகிறது. இம்முறையில் முதலீடு செய்யும்போது பாதுகாப்பு, வரி, செய்கூலி மற்றும் சேதாரம் போன்ற முதலீட்டு வளர்ச்சியை குறைக்கும் செலவுகள் தவிர்க்கப்படுகின்றன. ஒருவர் அவசரத் தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் பணம் மாற்றிக் கொள்ளலாம். நிலத்தில் முதலீடு செய்யும்போது ஒருவரின் தேவைக்கேற்ப தனது வாரிசுகளின் நலத்திற்காகவும் நீண்ட கால முதலீடாக இருக்கவேண்டும். குறுகிய கால தேவைக்காக பணத்தை நிலத்தில் முதலீடு செய்வது உகந்ததல்ல. தங்கத்தில் முதலீடு செய்யும்போது ஒருவரின் முதலீட்டில் 5 முதல் 10 சதவீதம்வரை இருப்பது சரியான அணுகுமுறை.

கணிசமான பணம் – கண்வ்ன்ண்க் இஹள்ட், இருப்பதுதான் பெரிய பலம் என்கிறார்களே அப்படித்தானா?

ரொக்கக் கையிருப்பின் அளவு (கண்வ்ன்ண்க் இஹள்ட்) ஒருவரின் தேவைக்கேற்ப இருக்க வேண்டும். உதாரணமாக மாத சம்பளம் பெறுபவர் 30 முதல் 6 மாத செலவு தனது ரொக்கக் கையிருப்பாக வைத்திருக்கலாம். மொத்த வருமானத்தையும் எந்த வகையிலும் முதலீடு செய்யாமல் ரொக்க கையிருப்பாக வைத்திருப்பதும் தனிநபரின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.

பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் , நிரந்தர வைப்புத் திட்டம் – இப்படி இருக்கிற எத்தனையோ முதலீடுகள் பற்றிச் சொல்லுங்கள்.

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், நிரந்தர வைப்புத் திட்டம் ஆகியவை வளர்ச்சி (எழ்ர்ஜ்ற்ட்), ரிஸ்க் (தண்ள்ந்) மற்றும் முதலீட்டுக் கால அவகாசம் (பண்ம்ங் ஏர்ழ்ண்க்ஷ்ர்ய்) ஆகியவற்றில் மாறுபடும் திட்டங்கள்.

பங்குச் சந்தை என்பது ஒரு நிறுவனத்தின் முதலீட்டில் நேரடியாக பங்கு பெறும் திட்டம். இதில் முதலீடு செய்யும்போது அந்த நிறுவனத்தின் வளர்ச்சி, திட்டங்கள், கடந்த கால லாப நஷ்டம் போன்ற செயல்பாடுகளை நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் என்பது வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கும் பரஸ்பர நிதித் திட்டம். அவர்கள் முதலீட்டாளர்களின் தொகையை அவர்கள் வகுத்துள்ள திட்டங்களின்படி நிதி ஆலோசகர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் கிடைக்கும் லாபம் ஒவ்வொருவரின் முதலீட்டு விகிதாச்சாரத்தின்படி பகிர்ந்தளிக்கப்படுகிறது.

‘நிரந்தர வைப்புத் திட்டம்’ என்பது முதியோர்கள், குறைந்த கால தேவைக்காக சேமிப்பவர்கள், மற்றும் முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கும் ஏற்ற திட்டம். இந்தத் திட்டமானது வங்கிகள், தபால் துறை மற்றும் சில தனியார் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. தனியார் துறை நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது அவர்களின் செயல்பாடுகளை நன்கு அறிந்து முதலீடு செய்வது நன்று. பங்குச் சந்தை முதலீடு அதிக வளர்ச்சி மற்றும் அபாயத்திற்கும் உட்பட்டது. பொருளாதார நிலைக்கேற்ப உங்கள் திட்டத்தை தேர்வு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் செயல்பாடுகள் தேர்ந்த நிதி ஆலோசகரால் நிர்வகிக்கப்படுவதால் நேரடி பாதிப்புகள் குறைவு. இந்த இரண்டு முதலீடுகளுமே நீண்ட கால அடிப்படையில் குறைந்தது 5 முதல் 10 ஆண்டு முதலீட்டுக்கு உகந்தது.

பொருளாதாரப் பின்னடைவு உலகமெங்கும் உள்ள சூழலில் எந்த வகையிலான முதலீடு பாதுகாப்பானது?

இன்றைய பொருளாதார பின்னடைவு சூழ்நிலையில் அதிக ஆபத்தில்லாத திட்டங்கள் சிறந்தது. தபால் துறை மற்றும் வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதித் திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் நடத்தப்படும் கடன் பத்திர முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவை நல்ல திட்டங்கள். ஒருவரின் பொருளாதார நிலைக்கேற்ப தேர்வு செய்யலாம்.

ஆதாயம் தரும் முதலீடுகள் எதுவுமே பாதுகாப்பானதில்லை என்கிறார்களே. இது உண்மையா?

ஆதாயம் தரும் முதலீடுகள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வது நல்லது. குறுகிய கால தேவை உள்ளவர்கள் சந்தையின் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படலாம். ஓய்வு ஊதியம் பெறுபவர்கள், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண நிகழ்வுகளுக்காகக் குறுகிய கால அடிப்படையில் முதலீடு செய்பவர்கள் இது போன்ற திட்டங்களை தவிர்ப்பது நல்லது.

நடுத்தர வர்க்க இந்தியக் குடும்பத்திற்கு எத்தகைய முதலீடுகள் – காப்பீடுகள் அவசியம்?

நடுத்தர வர்க்க குடும்பத்தினர் தங்களின் வயது, பொருளாதார நிலை, எதிர்காலத் தேவைகளின் அடிப்படையில் அவற்றின் கால அளவுக்கேற்ப ஒவ்வொருவரும் திட்டமிடுதல் வேண்டும். முதலீடு மற்றும் காப்பீடு தனிநபர் தேவைக்கேற்ப அமைக்கப்படுதல் வேண்டும். ஒருவரின் திட்டம் இன்னொருவருக்கு பொருந்தும். ஒவ்வொருவரும் தனது திட்டங்களை ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடு செய்தல் அவசியம்.

நிதி ஆலோசகராய் உருவாக என்னென்ன தகுதிகள் அவசியம்?

நிதி ஆலோசனை அளிப்பதில் வல்லுநர்களை உருவாக்குவதற்காக ஊடநஆ ஐய்க்ண்ஹ – ஊண்ய்ஹய்ஸ்ரீண்ஹப் டப்ஹய்ய்ண்ய்ஞ் நற்ஹய்க்ஹழ்க்ள் ஆர்ஹழ்க் ஐய்க்ண்ஹ என்ற அமைப்பானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது சுமார் 20 நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பில் இந்தியாவில் 47 நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு இங்ழ்ற்ண்ச்ண்ங்க் ஊண்ய்ஹய்ஸ்ரீண்ஹப் டப்ஹய்ய்ங்ழ்ள் என்ற வல்லுனர்களை உருவாக்குகிறது. இவர்கள் நிறுவனங்களில் ஆலோசகர்களாகவும் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரிகளாகவும் பணிபுரிகிறார்கள். மேலும் பலர் வாடிக்கையாளர்களுக்கு நிதி ஆலோசகராகவும் சேவை புரிகிறார்கள். இதுவரை நம்நாட்டில் 571 பேர் இந்தத் தகுதியை பெற்றிருக்கிறார்கள். இந்தத் தகுதியைப் பெற ஒருவர் நிதி நிறுவனங்களில் குறைந்தது மூன்றாண்டு வேலை செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஊடநஆ ஐய்க்ண்ஹ , சஹற்ண்ர்ய்ஹப் நற்ர்ஸ்ரீந் உஷ்ஸ்ரீட்ஹய்ஞ்ங் – உடன் இணைந்து நடத்தும் 5 தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்பிறகு சில கட்டுப்பாடுகளுடன் இங்ழ்ற்ண்ச்ண்ங்க் ஊண்ய்ஹய்ஸ்ரீண்ஹப் டப்ஹய்ய்ங்ழ்-ஆக தேர்ச்சி பெறுகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தனது தகுதியைப் புதுப்பிக்க வேண்டும். சில புள்ளிவிபரங்களின்படி 2011 ஆண்டு நம் நாட்டிற்கு சுமார் 1,00,000 நிதி ஆலோசகர்கள் தேவைப்படுகிறார்கள். ஆதலால் இத்துறையில் நிதி ஆலோசகர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். சில இன்சூரன்ஸ் முகவர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முகவர்கள் நிதி ஆலோசகர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு மக்களை அணுகுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தின் திட்டங்களைத் தவிர மற்ற முதலீட்டு வாய்ப்புகளை பற்றி அறிந்திருப்பதில்லை. மேலும் அத்தகைய திட்டங்களை விற்பனை செய்வதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள். உங்கள் நிதி ஆலோசகரை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

இந்தத் துறையில் உங்கள் சுவையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

இந்தத் துறையில் நிறைய சுவையான அனுபவங்கள் உண்டு. சுமார் ஓர் ஆண்டுக்கு முன் வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியமடைந்த 82 வயதுடைய முதியவர் என்னை அணுகி தபால் துறையில் வைப்புத் திட்டத்தில் இருந்த தனது ஓய்வுக்காலத் தொகை ரூ. 5 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆலோசனை கேட்டார். அவரது வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் தகுதியின்மை ஆகியவற்றை விளக்கி அந்தத் தொகையை தபால் துறையிலேயே வைத்திருக்க அறிவுறுத்தினேன்.

மேலும் பெரும்பாலும் சிறு முதலீட்டாளர்கள் சரியாக ஆலோசனை கூற சரியான நபர்கள் கிடைக்காததால் பங்கு மார்க்கெட், ரிஸ்க் ஆகியவற்றைப்பற்றி விளைவுகளை அறியாமல் யூலிப் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்களில் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற தவறான நோக்கில் முதலீடு செய்து ஏமாற்றமடைகிறார்கள். இது தனி மனிதனின் பொருளாதாரத்தை பாதிப்பதோடல்லாமல் எதிர்காலத்தின் குறிக்கோள்களை கேள்விக்குறியாக்கிவிடுகிறது.

இதுபோன்ற முதலீடுகளை தேர்வு செய்யும்போது நன்கு அறிந்து தனக்கு உகந்தது என்றால் மட்டுமே முதலீடு செய்வது நன்று. முதலீடு செய்யும்முன் இதுபோன்ற முதலீடுகளை விற்பனை செய்யும் முகவர்கள் சரியான ஆலோசனையைக் கூறுகிறார்களா? அல்லது சரியான தங்களது விற்பனையில் குறியாக இருக்கிறார்களா என முடிவு செய்ய வேண்டும்.

எந்த முதலீடும் சரி தவறு என்பதைவிட தனக்கு உகந்ததா என முடிவு செய்ய வேண்டும். வரும் ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் சரியான திட்டங்களில் முதலீடு செய்து தங்களது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வாழ்த்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *