“சொல்லுதல் யாருக்கும் எளிதாம் எளிது
சொல்லிய வண்ணம் செயல்!”
என்று கண்டிப்பாக மாற்றித்தான் எழுதியிருப்பார். அந்த அளவிற்கு “நமது நம்பிக்கை” ஊக்கமும், உற்சாகமும், அளிக்கின்றது. பிற புத்தகங்கள் படிப்பவர்கள் “உலக எண்ணிக்கையில் ஒருவர் என்றால்’ நமது நம்பிக்கை படிப்பவர்கள் “உலகம் எண்ணுகையில் ஒருவராக திகழ்வார்” என்பது திண்ணம்! வாழ்க உமது சேவை! வளர்க உமது புகழ்!
திரு.எஸ்.பி.செல்வராஜ், திருத்தங்கல்.
ஏப்ரல் இதழில் ஆசிரியர் அவர்களின் அட்டைப்படக் கட்டுரை மிகவும் அற்புதம். பொதுவாக நம் நாட்டில் குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு போதுமான ஞானம் கிடையாது. சுருக்கமாக இருந்தாலும் நல்ல வழிகாட்டியாக கட்டுரை அமைந்துள்ளது.
ஆனந்தன், ஆண்டிப்பட்டி.
ஏப்ரல் மாதத்தில் உருவான சம்பவங்கள் பற்றி சிநேகலதா கூறியவற்றை எல்லோரும் உள்ளத்தில் பதியவைத்துச் செயல்படுவது சிறப்பானது. நேரத்திற்கு மதிப்பு உண்டு. அது இடம், பொருள், சூழ்நிலைகள் பொறுத்து மாறும். இதனைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் வெற்றி கிடைப்பது உறுதி என சோம. வள்ளியப்பன் கூறிய கருத்து உண்மைதான். குழந்தைகள் சாதனையாளர்களாக மாறவேண்டுமானால் பெற்றோர்கள் எந்த வகையில் துணை புரிய வேண்டும் என மரபின்மைந்தன் கூறிய கருத்துக்கள் சிந்திக்கத்தக்கது.
திரு.தியாகராசன், இலால்குடி.
நமது நம்பிக்கை இதழ் ஆரம்பம் முதல் படித்து வருகிறேன் ஒவ்வொரு மாதமும் பல்வேறு அனுபவங்களை வெளியிட்டு வருகின்றது. இந்த இதழில் ஆசிரியரின் கட்டுரை மிகவும் அருமை. திரு.ராமலிங்கம் அவர்களின் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. அத்துடன் அனைத்து பகுதிகளும் நம்பிக்கையுடனேயே இருந்தன.
திரு.ராஜன், ஈரோடு.
ஏப்ரல் இதழில் “வெற்றி வாசல்” 2008ல் நாளை நமதே என்னும் தலைப்பில் திரு.கோபிநாத் அவர்களின் உரை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அடுத்தமுறை வெற்றி வாசலில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டியது இக்கட்டுரை. வல்லமை தாராயோ என்னும் தலைப்பில் ஆசிரியரின் வெற்றிக்கு வழிகாட்டும் விழிப்புணர்வு என்னும் உரை வடிவம் பலப்பல லட்சியங்களைத் தொட வழிகாட்டியது. நமது நம்பிக்கைக்கு எனது நன்றி.
திரு.ரமேஷ், சேலம்.
Leave a Reply