கவலைவயப்பட்டிருந்த இளைஞன் ஒருவன், குளக்கரையில் அமர்ந்து தண்ணீரில் கல்லெறிந்து கொண்டிருந்தான். பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் பொதுவாய்ச் சொன்னார், “மனம் ஒரு குளம். கவலைகளை எறிய எறிய அதிலிருந்து வட்டங்கள் கிளம்பிக் கொண்டே இருக்கும். குளத்தின் அமைதி குலையும். வட்டம் கிளப்புவதைத் தடுக்க வேண்டுமா? கல்லெறிவதை நிறுத்து.
கவலைப்படுவதைத் தடுக்க வேண்டுமா? இதயம் என்ற குளத்தில் வேண்டாத எண்ணங்கள் நுழைவதை நிறுத்து”. சிறிது நேரத்தில் குளமும் தெளிந்தது. மனமும் தெளிந்தது.
Leave a Reply