கற்றலையும் கற்பித்தலையும் கைகொள்

– மகேஸ்வரி சற்குரு

EBOOT <---> START நாம் கண்டுபிடித்த கம்ப்யூட்டர் நமக்குக் கற்றுக்கொடுத்த வெற்றி வார்த்தைகள். தினமும் நாம் கேட்கும் வார்த்தைகள் இது. கம்ப்யூட்டரை மீண்டும் ஒருமுறை புதியதாக இயக்க strart மெனுவில் கிடைக்கும் restart மூலம் துவங்குகிறோம். கண்ட்ரோல்”ஆல்ட்”டெலீட் இவை மூன்றும்தான் புதிய இயக்கத்திற்கான மந்திரச் சாவிகள். கட்டுப்பாடு”மாற்றம்”அழித்தல் தேவையற்ற

செயல்கள் எண்ணங்கள் இவற்றைக் கட்டுப்படுத்தி, செயல்களில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, சோம்பலை நீக்கிவிட்டால் போதும். நாம் புதிய இயக்கத்திற்கு தயாராகிவிட்டோம்.

வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் தினம்தோறும் தங்களை தஉஆஞஞப செய்வதால்தான் வெற்றியாளராகவே இருக்கமுடிகிறது. மிகச்சிறந்த பேச்சாளர், மிகச் சிறந்த பாடகர், மிகச்சிறந்த தொழிலதிபர், எழுத்தாளர் என அனைவருமே முந்தைய தவறுகளை மறந்தும்கூட செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு புதிய நாளே! இந்த நாள் இனிய நாள் என்பதைவிட புதிய நாள், புதிய வாழ்க்கை, புதிய வேலை, புதிய சிந்தனை, புதிய எண்ணம், புதிய முதலீடு, புதிய வெற்றி!

வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது. ஆனால் தோல்வியோ நாம் கற்றுக் கொள்கின்ற ஒன்று. கற்றுக் கொண்டால்தான் பெற்றுக் கொள்ள முடியும். தோழர்களே! கற்றுக் கொள்வதும் நம் கைகள்தான். பெற்றுக் கொள்வதும் நம் கைகள்தான். கற்றுக்கொள்கின்ற நேரத்தில் (தோல்வி) கைகள் வலுப்பட்டால்தான் வெற்றி பெறுகின்ற சமயத்தில் கைகள் தாங்குகின்ற சக்தியைப் பெறும்.

மலை ஏறும் பயிற்சியை மேற்கொண்ட ஒருவர் சீரான வேகத்தில் தொடர்ந்து ஏறினால்தான் முன்னேறமுடியும். சீரற்ற வேகம் சறுக்கலைச் சந்தித்துவிடும். சிரமப்பட வேண்டும். சற்று விவேகமாக! சீரான தொடர் முயற்சிதான், சீக்கிரமே சிகரத்தின் உச்சியை அடைய முடியும்.

வீண் விவாதங்களும், தர்க்கங்களும் தேவையற்ற ஒன்று. விவாதம் வேலையை முடக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. தனக்கு உரித்தான வேலையை, தர்க்கமின்றி, தாமதமின்றி செய்தாலே போதும் இலக்கை எளிதில் அடையலாம். அண்மையில் ய.த.ந. மூலம் மூடப்பட்ட ஒரு மிகப்பெரிய இங்கிலாந்து கம்பெனியில் நடந்தது இது. இயந்திரப் பிரிவு மேலாளர்! அவரின் வேலை தன் கீழ் பணிபுரியும் 67 பேரை ஒழுங்காக வேலை செய்யச் சொல்வது மட்டுமே! வேலை வாங்குவது மட்டுமே! அவர் செய்ததோ எல்லாம் நானே என்ற பாணியில், கங்ற்ற்ங்ழ்கள் வந்தாலும், இவரே பார்ப்பது, பர்ர்ப்ள் எடுத்துத் தருவது என்றாலும் இவரே! குடிக்கத் தண்ணீர் சொல்ல வேண்டும் என்றாலும் இவரே! சதா சர்வகாலமும் இருக்கும் இடம் விட்டு அரக்க பரக்க அங்கும் இங்கும் நடப்பது, இந்தக் கம்பெனியிலே டீ சொல்வதும்கூட நானே! நானே! என்று புலம்பல். எதையும் ஒழுங்காகச் செய்யாமல், இறுதியில் அறிவிக்கப்பட்ட ய.த.ந. பட்டியலில் இவர் பெயர்தான் முதலிடம். 438 பேர் செய்த அந்த இங்கிலாந்து கம்பெனியில் தேறிய 4 பேர் மட்டுமே வட இந்தியாவிற்கு மாற்றப்பட்டனர். அவரவர் வெற்றிக்கும், தோல்விக்கும் அவரவர்தான் காரணம், அவர்களின் செய்கை மிகப் பெரிய காரணம்.

வெற்றிக்கான வழிகளாக உபநிடதங்கள் நமக்குத் தந்தது ஐந்து வழிகள் (பஞ்ச இரத்தினங்கள்)

1. உண்மையைக் கடைப்பிடி
2. இறைவனையும் முன்னோரையும் வழிபடு
3. செல்வத்தைத் தேடு
4. வாழ்வில் சவாலை எதிர்கொள்
5. கற்றலையும் கற்பித்தலையும் எதிர்கொள்.

எந்த சூழ்நிலையிலும் உண்மையாக இருத்தல் நமது மிகப்பெரிய பலமாகும். ஒவ்வொரு விடியலும் பிரார்த்தனையுடன் தொடங்கினால் அதுவே வெற்றிக்கான விடியலும் ஆகும். செல்வத்தைத் தேட வேண்டும். தேடுதல் இருந்தால் போதும் எளிதில் வெற்றி காணலாம். தேடுதலின் போது வருகின்ற சவாலை எதிர்கொள்ள வேண்டும் புன்னகையுடன்! நிறைவாக கற்றலையும் கற்பித்தலையும் கைகொள்ள வேண்டும். கற்றுக் கொள்ளும்போது 200% கவனத்துடன் கற்றுக் கொண்டால் 100% வெற்றி நமக்குத்தான். கற்றுக் கொண்டதை வைத்து செல்வத்தைத் தேடினால் அதுவே வெற்றிக்கான சரியான சாலையாக அமையும். சரியான வேர்!

“2 படிக்கின்றபோது தன் தந்தையை இழந்த அகில் பூங்குன்றன் என்ற இளைஞர், படித்தது மாநகராட்சி பள்ளியில் சரளமான ஆங்கிலப் பேச்சு இல்லை என்றாலும், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸில் பல்கலைக்கழகத்தில் முதல் மதிப்பெண். ங.ஆ.அ., அதே பல்கலைக்கழகத்தில். பெங்களூரில் உள்ள உஙடஏஅநஐந நிறுவனத்தில் நஹ்ள்ற்ங்ம் அய்ஹப்ஹ்ள்ற் ஆகச் சேர்ந்து, இன்று அமெரிக்காவில் உஙடஏஅநஐந சார் நிறுவனத்தில். 32 வயதில் கோவையில் 35 லட்சத்தில் ஒரு வீடு, பல இடங்களில் வீட்டு மனைகள், பேங்க் பேலன்ஸ் பல லட்சங்கள், சிறந்த மேலாளர் என்ற விருது. வெற்றிக்கான காரணமாக இளைஞன் சொல்வது, “இறந்த எனது தந்தையின் ஆசிர்வாதமும். தாயின் பிரார்த்தனையும், கற்றுக்கொண்ட தனது அறிவும் கற்றுத் தந்த ஆசிரியர்களும்” என்று.

எடுத்த காரியம் யாவிலும் வெற்றி வேண்டும் என்றால் செய்கின்ற செயல்களில் உண்மையும், உழைப்பும் வேண்டும்.

“ஓய்வு என்பது வேலையிலிருந்து ஓடுவது அல்ல. வேலைக்குத் தன்னை தயார் செய்து கொள்வது” – செர்னி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *