சர்வம் மார்க்கெட்டிங் மையம்

-பேரா. சதாசிவம்

முதலில் நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும்

சந்தையில் ஒரு பொருளை எடுத்துச் செல்பவர்கள் ஒரு வாடிக்கையாளரை திருப்திபடுத்திவிட்ட பிறகு அந்த வாடிக்கையாளரை எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது பொருளை வாங்கிய வாடிக்கையாளர் பொருளின் தரத்தைப் பற்றி என்ன நினைக்கின்றார் அதன் நிறைகள் யாவை குறைகள் யாவை

போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து கருத்துக்களை கேட்டும் அதற்கேற்றபடி மாற்றங்கள் ஏற்படுத்திக் கொடுத்தால் அந்த வாடிக்கையாளருக்கு மார்க்கெட்டிங் செய்யும் ஒரு தனி நபரின் மேல் ஒரு மரியாதையும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஏற்பட்டுவிடுகிறது. அதன் பின் அந்த தனி நபர் எந்த நிறுவனத்திற்கு சென்றாலும் அவர் எந்தப் பொருளை விற்பனைக்கு எடுத்துச் சென்றாலும் அவர் வாடிக்கையாளரால் அங்கீகரிக்கப்படுவார். அந்த அங்கீகாரம் ஒரு தனி மனிதனுக்கும் அவர் செய்யும் சேவைக்கும் கிடைக்கும் சான்றிதழாகும்.

இப்படி பல வகையான வாடிக்கையாளர்களை தன் வசத்தில் வைத்திருக்கும் பிரதிநிதிகள் பிற்காலத்தில் சொந்த தொழில் ஏற்படுத்தி அதிலும் தன்வசம் உள்ள வாடிக்கையாளர்களைக் கொண்டு ஒரு ஸ்திரமான தளத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். எனவே தொடர்ந்து ஒரு வாடிக்கையாளரிடம் நல் மதிப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்திக் கொள்வது இருவருக்கும் நல்லது. இதற்கு பணி புரியும் நிறுவனங்கள் எப்போதும் உதவும் என்று கூறமுடியாது. ஆதலால் அவரவர்களாக முயற்சி செய்து வாடிக்கையாளர்களின் கவனத்தில் எப்போதும் இருக்கும் வண்ணம் நடந்துகொள்ள வேண்டும். சிலர், வாடிக்கையாளர் பற்றிய முழு தகவல்களையும் வைத்துக் கொண்டு முக்கிய தினங்களில் வாழ்த்து தெரிவிப்பது மற்றும் புது பொருட்கள் சந்தையில் அறிமுகமான தகவல்களை அவ்வப்போது செய்தி அனுப்பியும் தம் சேவையை உணர்த்தலாம்.

மார்க்கெட்டிங் அணுகுமுறைகள் பலவிதமானவை. தம் பொருட்களுக்கு தகுந்தாற்போலும், நுகர்வோர்களுக்கு தகுந்தாற்போலும் அணுகுமுறைகளை கடைபிடிப்பது நல்லது. இதை ஒவ்வொன்றையும் பணிபுரியும் நிறுவனங்கள் கற்றுத் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஒரு பொது அறிவின் மூலமே எது சிறந்த அணுகுமுறைஎன்று அனுமானிக்க வேண்டும். மார்க்கெட்டிங் அணுகுமுறைகள் சிலவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

முதலில் வாடிக்கையாளரின் மன நிலையைப்பற்றியும் அவரின் ஓய்வு நேரம், வேலை நேரம் போன்றவற்றைப் பற்றி தெரிந்து வைத்துக்கொண்டு வாடிக்கையாளரின் முழு அனுமதியின் பேரில் அவரை சந்திப்பது நல்லது. ஏனென்றால் நமக்காக ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை நாம் பயனுள்ளதாக முழுவதும் உபயோகப்படுத்தலாம். அப்போது வாடிக்கையாளரும் நாம் சொல்வதை கவனிக்கும் மனநிலையில் இருப்பார். இதுதான் உரையாடுவதற்கு சரியான நேரம். சில பொருட்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்வதற்கு இந்த அணுகுமுறைபயணளிக்கிறது. குறிப்பாக குறைந்த விலையில் விற்கப்படும் பொருட்கள். அதற்கு நேரடியாக வாடிக்கையாளரை சந்தித்து பொருளைப்பற்றி விளக்கி விற்றுவிட வேண்டும். முன் அறிவிப்பின்றி இப்படி அணுகுவதை இர்ப்க் ஸ்ரீஹப்ப்ள் என்று கூறுவர். திடீரென்று பொருட்களைப் பற்றி எடுத்துக்கூறி விளம்பரம் செய்வதும் விற்பனை செய்வதை என்ங்ழ்ண்ப்ப்ஹ ஙஹழ்ந்ங்ற்ண்ய்ஞ் என்று கூறுவர்.

அடுத்த சில வகையான பொருட்களை பலர் கூடியிருக்கும் இடத்தில் விவரிக்கும் போது அந்தப் பொருள் பற்றிய தகவல் பலர் மனதில் செல்லும். பிறகு அவர்கள் வாயிலாக அது மேலும் பரவும். இதை யண்ழ்ஹப் ஙஹழ்ந்ங்ற்ண்ய்ஞ் என்று கூறுவர். இந்த அணுகுமுறைவிலை உயர்ந்த பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதற்கு பெரிதும் உதவும்.

ஒரு சேவையை மையமாக வைத்து மார்க்கெட்டிங் செய்வதற்கு வேறுவிதமான அணுகுமுறைதேவைப்படுகிறது. உதாரணமாக இன்சூரன்ஸ் மற்றும் இதர நிதி சார்ந்த மார்க்கெட்டிங் செய்யும் போது, வாடிக்கையாளர்களின் தொலைநோக்கு பார்வையின் முக்கியத்தை சார்ந்து இருத்தல் அவசியம். அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளரிடம் சேவையின் தரத்தை விளக்கும் சான்றுகள் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நமக்காக நம்மைப்பற்றி பேசக்கூடிய ஒரு வாடிக்கையாளரின் விபரங்களை கொடுத்து நம் சேவையைப்பற்றி கருத்துக்களை அறிந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்யலாம். சேவையை மையமாக வைத்து மார்க்கெட்டிங் செய்யும்போது மூன்றாவது நபரின் கருத்து எப்போதும் எடுபடும்.

ஆகவே மார்க்கெட்டிங் புரிபவர்கள் தம்மைப்பற்றி நல்ல ஒரு அபிப்பிராயம் ஏற்படுத்த எப்போதும் முயன்று கொண்டிருக்க வேண்டும். நம்மைப் பற்றி நல்ல கருத்து நிலவும் நிலை வந்தால் நம் கையில் எந்தப் பொருள் கிடைத்தாலும் நம்பிக்கையுடன் அதை சந்தைக்கு எடுத்துச் செல்லலாம்.

சந்தையில் விலை போவது நம் பொருட்கள் மட்டும் அல்ல ஒரு தனி மனிதனின் சேவை பற்றிய வாடிக்கையாளரின் கருத்தும் தான் என்பது முக்கியமான விஷயமாகும். மார்க்கெட்டிங் மேற்கொள்பவர்கள் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை இனி தொடர்ந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *