ஜூலை 15 1985
ஆல்டஸ் நிறுவனத்தின் பேஜ்மேக்கர் என்ற மென்பொருள் இன்றுதான் உலகுக்கு அறிமுகமானது. செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் பிரசுரிப்பதற்கு ஏற்ற வகையில் கண்டறியப்பட்ட உலகின் முதல் மென்பொருள் இது!
ஜூலை 16 1995
அமேஸான் டாட் காம் என்னும் இணைய தளம் அறிமுகம் செய்யப்பட்ட நாள் இன்று! இந்நிறுவனத்தின் வழியாக புத்தகங்கள் முதல் மாதத்திலேயே 50 மாநிலங்களிலும், 45 நாடுகளிலும் விற்பனையாயின.
ஜூலை 17 1902
வில்ஹெம்ஸ் லித்தோ கிராபிக் என்னும் பதிப்பகத்தில்தான் குளிர் சாதன வசதி முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. அவர்கள் அச்சகத்தில் உள்ள காகிதங்கள் உஷ்ணமான சூழ்நிலையால் விரிவடைவதை தடுக்க குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தினர்.
ஜூலை 5 1923
பிரிட்டனில், கோடாக் 16 ஙங மாடல் கேமிரா மற்றும் ப்ரொஜக்டர் இன்று அறிமுகப் படுத்தப்பட்டது. 1896 முதலே திரைப்பட உபகரணங்கள் இருந்த போதும், இதன் எளிமையான செயல்முறை பெரும்பாலான மக்களை கவர்ந்தது.
ஜூலை 3 1819
அமெரிக்காவின் முதல் சேமிப்பு வங்கி, =தி பேங் ஃபார் சேவிங் இன் சிட்டி ஆப் நியுயார்க் + என்ற பெயரில் இந்நாளில் துவக்கப்பட்டது. முதல் நாள் வங்கியில் 80 முதலீட்டாளர்களிடமிருந்து 2807 டாலர்கள் பெற்றதாக கணக்கு வெளியிடப்பட்டது. ஆனால் முதல் ஆறு மாதங்கள் நஷ்டத்தை சந்தித்தது.
ஜூலை 7 1928
கிரைஸ்லர் கார்ப்பரேஷன் நிறுவனம் பிளைமூத் என்னும் மோட்டார் வண்டியை மிகவும் மலிவான விலையில் இன்று அறிமுகம் செய்தது. அது ஃபோர்ட் மற்றும் அதன் போட்டி நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்தது. இதன் அறிமுக விலை 670 டாலர்கள்! முதல் வருடத்திலேயே 80,000 யூனிட் விற்பனையாகி சாதனை படைத்தது.
Leave a Reply