நமக்குள்ளே

நமது நம்பிக்கை ஜுன் இதழில் ஆசிரியரின் கவிதையை வாசித்தேன் ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாய் இது போன்ற கவிதையை வாசித்தே தீரவேண்டும். அதில் பல அர்த்தங்கள் உள்ளன. அதை உணர்ந்து வார்த்தைகளைக் கோர்த்து கவிதையாய் கொடுத்தமைக்கு நன்றிகள் பல. இது மட்டுமல்ல அச்சில் ஏற்றிய அனைத்து கட்டுரைகளும் மிக பயனுள்ளதாய் இருக்கின்றது. தேன் துளிகளை சேகரித்த தேனீக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள்.

சரஸ்வதி, பா.நா.பாளையம்.

‘துணிவுதான் வெற்றியின் தோணி’ என்பதை மரபின்மைந்தன் கவிதையில் உச்சி மோந்திருப்பது படிப்போரை புதிய உத்வேகம் கொள்ளச் செய்கிறது. கவிஞரின் நம்பிக்கையை கவிதை மூலம் வெளிப்படுத்தி இளைய தலைமுறையினரையும் கவர்ந்து விட்டீர்கள். ‘உங்கள் வாழ்க்கை உங்கள் வழியில்’ கட்டுரை உண்மை உழைப்பை செவ்வனே எடுத்துச் சொல்லி வாசகர்களை புதிய தளத்திற்கு அழைத்துச் செல்கிறது.

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

“வாழ்க்கையில் வெற்றி, சிந்தனைக்கும் செயலுக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்து இருக்கிறது” என்னும் வரிகளில் வாழ்க்கையின் வெற்றி ரகசியத்தை விவரித்த தவத்திரு.பொன்னம்பல அடிகளார் அவர்களின் உரை வெகுசிறப்பு.

த.சூரியதாஸ்., சிலட்டூர்.

“கவிஞர் கண்ணதாசன் ஊற்றெடுக்கும் நம்பிக்கை” என்ற அட்டைப்படக் கட்டுரையில் ஆசிரியர் ஆழமாகக் சென்று பகுத்தறிவித்திருக்கிறார். பாராட்டுக்கள் பல.

ச.தில்லைமணி, கோவை.

திரு.மதன்மோகள் அவர்களின் நேர்காணல் இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தது. கே.ஆர்.நல்லுசாமி அவர்களின் இயக்க வைப்போம்! வியக்க வைப்போம் கட்டுரை மனதைப் படம் பிடித்துக் காட்டியது. மேலும் அனைத்து கட்டுரைகளும் பயனுள்ளதாக இருந்தது.

நா.காளிதாசன் கோபி.

திருமதி.மகேஸ்வரி சற்குரு எழுதிய “கற்றலையும் கற்பித்தலையும் கைக்கொள்” கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது. மேலும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கம்ப்யூட்டரையும் கூட உபயோகப்படுத்தி நம்பிக்கையூட்ட முடியும் என்பதையும் கூறிய விதம் நன்றாக இருந்தது.

முத்துக்குமார், லட்சுமி நாராயணன், கோவை.

Leave a Reply

Your email address will not be published.