டிஸ்லெக்ஸியா நோய் காரணமாய் அந்த பெண்ணை பதினாறு வயது வரை பள்ளிக்கு அனுப்ப வில்லை. எழுதப் படிக்கத் தெரியாமலேயே வாழ்ந்தார். ஆனால், ஒரு மருத்துவராக வர வேண்டும் என்ற கனவு இருந்தது. சின்னச்சின்ன வேலைகள் பார்த்துப் பணம் ஈட்டினார். பள்ளிக் கல்விக்கு இணையாக தேர்ச்சியை மிக அதிக மதிப்பெண்களுடன் பெற்றார். ஆனாலும் அவரது
விண்ணப்பங்களை 15 மருத்துவக் கல்லூரிகள் நிராகரித்தன. கடைசியில் அல்பானி மருத்துவக் கல்லூரி ஏற்றது. 1984ல் மருத்துவத்தில் ஹானர்ஸ் பெற்றுத் தேறியவர் மேரிக்ரோடா லூயிஸ். நெஞ்சில் உறுதி இருந்தால் நோய்கள் எல்லாம் தடையில்லை.
Leave a Reply