விளையாட்டுகளுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே விளையாட்டுகளுக்கு செய்யப்படும் நேர்முக வர்ணனைகளுக்கும் உலகெங்கும் ரசிகர்கள் உண்டு. அந்த விளையாட்டிலேயே முன்னொரு காலத்தில் முத்திரை பதித்தவர்களும், நேர்முக வர்ணனையாளர்களாய் அவதாரம் எடுப்பதுண்டு.
இந்த வர்ணனையாளர்கள், விளையாடுபவர்களின் பலம்-பலவீனம் பற்றிய துல்லியமான மதிப்பீடு கொண்டவர்களாக இருப்பார்கள். அதே மாதிரி ஒவ்வொரு பந்தும் வீசப்படும் முறையை, எதிர் கொள்ளும் முறையை இவை குறித்து மிகச்சரியான பார்வையை முன்வைப்பவர்களாக இருப்பார்கள்.
மைதானத்தில் என்ன நடக்கிறது என்று சொன்ன கையோடு, இதை இன்னும் எப்படி சரியாகச் செய்திருக்கலாம் என்பதுவரை …………………………. நேர்முக வர்ணனை என்று பெயர்.
உண்மையில் நம் ஒவ்வொருக்குள்ளேயும் நேர்முக வர்ணனையாளர் ஒருவர் நிச்சயம் இருக்கிறார். விளையாட்டுக்களை பொறுத்த வரை, வர்ணனையாளர் சொல்வது பார்வையாளர்களுக்குத்தான் கேட்குமே தவிர, விளையாடும் வீரர்களுக்கு கேட்காது. ஆனால் இங்கே அப்படியில்லை. நாம் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றையும் நமக்கு மட்டும் கேட்கும்படி விவரித்துச் சொல்கிறார் அந்த வர்ணனையாளர். அந்தக் குரலில் விவரிப்பு இருக்கிறது. விமர்சனமும் இருக்கிறது. நமக்குள் ஒலிக்கும் இந்த நேர்முக வர்ணனையை நம்மில் பலர் கவனிப்பதில்லை.
இந்தக் குரலை ‘உள்மனம்’ என்று சொல்லுங்கள். மனசாட்சி என்று சொல்லுங்கள். என்ன பெயர் வேண்டுமானலும் கொடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் குரலை கவனிக்கிறீர்களா என்பதுதான் விஷயம்.
இந்தக் குரல் நமக்கு முழுமையாக பயன்பட வேண்டுமா? அதற்கொரு வழி இருக்கிறது. நம்முடன் நாம் சிறிது நேரத்தை செலவிட வேண்டும். எப்போதும் யாரேனும் உடனிருக்க வேண்டும் என்கிற உணர்வே அடிப்படையில் கொஞ்சம் ஆரோக்கியக் குறைவானதுதான். தனிமையின் சுகத்தை உணரமுடியதவர்கள் தங்கள் ………… பாதுகாப்பாக உணரவில்லை என்று பொருள். “இனிது இனிது ஏகாந்தம் இனிது” என்ற அவ்வைக்கு அந்த உண்மை நன்றாக புரிந்திருக்கிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு நிமிஷங்களை, உங்களுக்காக-தனிமையில் செலவிடுகிறீர்கள் என்று பாருங்கள். அந்த நேரங்களில், உற்சாகமாக உணர்கிறீர்களா என்பதுதான் முக்கியம். தனிமையில் உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ள நேரம் செலவிட செலவிட, உங்களுக்குள் ஒரு புதிய ஒழுக்கமும், நிதானமும் படிவதை உணர்வீர்கள். கீழ்க்கண்ட சுபாவங்கள் உங்களிடமிருந்து வெளிப்படும்.
- பாராட்டப்படும் போது தலைவணங்கி நன்றியுணர்வுடன் ஏற்றுக் கொள்வீர்கள். விமர்சிக்கப்படும் போது விழிப்புடன், அக்கறையுடன் கேட்டுக் கொள்வீர்கள்.
- புதிய அறிமுகங்கள் நிகழும்போது, புன்னகையுடனும், பிரியத்துடனும் உங்களை அறிமுகம் செய்துக் கொள்வீர்கள்.
- தனிப்பட்ட உரையானாலும், தொலைபேசி உரையானாலும் மென்மையாக ஆனால் தெளிவாக நிகழ்த்துவீர்கள்.
- உங்களை நீங்களே வெளிப்பட பாராட்டிக் கொள்வதையும், ……………. அடித்து கொள்வதையும் விழிப்புணர்வுடன் தவிர்ப்பீர்கள்.
- செய்வதை திறம்பட செய்வீர்கள். தவறு நேர்ந்தாலும் ஒப்புக் கொள்வீர்களே தவிர சாக்குப்போக்குகள் சொல்ல மாட்டீர்கள்.
- உங்களுக்கான முன்மாதிரிகளை உணர்ந்து அவர்களின் பலங்களை மட்டுமே பின்பற்றுவீர்கள்.
- தவறு செய்பவர்களை தடாலடியாக விமர்சனம் செய்து அவர்களை புரிந்து கொள்ள முற்படுவீர்கள்.
- வாழ்க்கை குறித்து நேர்மையான எண்ணங்களும், அணுகுமுறைகளும் இருப்பவர்களையே நெருங்குவீர்கள்.
- நீங்கள் ஓர் இலக்கை அடைவதற்கென்று …………… திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால், பாதை மாறினாலும் போய் சேர வேண்டிய இடம் எது என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.
- வெற்றி தோல்வி இரண்டும் கற்றுக் கொள்ளல் என்னும் அம்சத்தின் அங்கங்கள்தான் என்பதை உணர்வீர்கள்.
- வெளிச்சூழலில் அளவு கடந்த உற்சாகம் இருப்பினும், எல்லையில்லாத பதட்டம் இருப்பினும், எப்போதும் உங்கள் உள்தன்மையில் அமைதியை உணர்வீர்கள்.
இத்தனையும் நிகழ்வதற்கு முதலில், உங்களுக்குள் ஒலிக்கும் குரலை உன்னிப்பாக கேளுங்கள்.
Leave a Reply