அந்தக்காலம் இந்த மாதம்

Bussiness week

மனித வள மேம்பாடு குறித்து ‘பிஸினஸ் வீக்’ நிறுவனத்தால் கருத்து கணிப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைந்த அளவில்தான் வித்தியாசமான முயற்சிகளை (Risk) செய்து பார்க்கிறார்கள். இருந்த போதிலும் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பெரும்பாலும் நிராகரிக்கப் படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

நியூயார்க் நகரில், ‘மெக் டோனல்ட்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்புகளை சாப்பிடுவோர் எடை கூடுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராபர்ட் ஸ்வீட், மெக் டோனல்ட்ஸ் நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானதென்று தீர்ப்பளித்தார்.

பல கோடி மதிப்புள்ள உலகின் முன்னணி நிறுவனமான கூகிள்.காம், மென்லோ பார்க், கலிபோர்னியா நகரில், கார்ஷெட் ஒன்றில் துவங்கப்பட்டது.

ஓஹாயே நகரில், முதல் ஜப்பானிய மோட்டார் வாகனத்தின் உற்பத்தி 260,000 சதுரடி பரப்பில் இன்று துவங்கப்பட்டது. ஒரு நாளில் 10 மோட்டார் வண்டி உற்பத்தி செய்யப்பட்டு பின்னாளில் ஓர் ஆண்டில் 24,000 மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

உலகில் முதன் முதலாக வணிக ரீதியாக வெற்றிபெற்ற தட்டச்சு இயந்திரம், ரெமிங்டன் நிறுவனத்தால் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில், ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஃப்ரைட்ரிக் ஏங்கல்ஸ் இன்று பணி ஓய்வு பெற்றார். பின்பு லண்டனில் கார்ல் மார்க்ஸின் (இஹல்ண்ற்ஹப்ண்ள்ம்) கொள்கையை பரப்பியதில் முக்கிய பங்கு வகித்தார்.

அமெரிக்காவில் உலகின் முதல் வணிகரீதியான ‘சூயிங்கம்’ ஜான் கர்பீஸ் என்பவரால் அவரது இல்லத்தில் இன்று தயாரிக்கப்பட்டது. அதற்கு ‘ஸ்டேட் ஆப் மெயின் பியுர் ஸ்ப்ரூஸ்’ என்று பெயர் சூட்டினார்.

‘தி ஹோண்டா மோட்டார் நிறுவனம்’ கார் தயாரிப்பில் முன்னணி வகித்தது. இந்த நிறுவனம் ‘சாய்கிரோ ஹோண்டா’ என்ற பொறியாளரால் ‘ஹோண்டா டெக்னிக்கல் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட்’ என்ற பெயரில் இன்று துவங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *