சிங்கத்திடம் வேலைக்குச் சேர்ந்தது அணில். சிங்கம் வேலை வாங்கிக்கொண்டே இருந்தது. சம்பளம்? “என்ன அவசரம்! உனக்கு என்ன பிடிக்கும் என்று தெரியும். அவசியம் தருகிறேன்” என்றது சிங்கம். பல ஆண்டுகள் கழிந்தன. முதுமையடைந்த அணில் ஓய்வு பெற நினைத்தது. கணக்கைத் தீர்க்குமாறு கேட்டது. விடைபெறும் நாளன்று ஒரு வண்டி நிறைய கொட்டைகளையும்
பருப்புகளையும் கொட்டிக் கொடுத்தது சிங்கம். முதிர்ந்துவிட்ட அணிலுக்கோ கடித்துச் சாப்பிடப் பல்லில்லை. எதிர்த்துப் பேசவும் சொல்லில்லை. உழைப்பின் பயனை உடனே பெறுவதே உயர்வு.
Leave a Reply