திருச்சியில் துவங்கியது நூற்றுக்கு நூறு இயக்கம்

– ராதேகிருஷ்ணா

சென்னை, கோவைக்கு அடுத்து திருச்சியில் 11.10.2009 அன்று துவங்கியது நூற்றுக்கு நூறு இயக்கம். ஹோட்டல் பெமினாவில் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1200 மாணவர்கள் பெற்றோர் உடன் வந்து கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மாலையில் நமது நம்பிக்கை, சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் இணைந்து நடத்திய சாதனையாளர்களை உருவாக்குவோம் கருத்தரங்கில் நூற்றுக்கு நூறு இயக்கம் பற்றி திருச்சி மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு துவக்கப்பட்டது.

எல்லோருக்குமே சமுதாயம் மாறவேண்டும். சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அந்த மாற்றம் அடுத்தவரிடத்திலிருந்து துவங்க வேண்டும் என்று எண்ணுவதால்தான் எந்த ஒருபெரிய மாற்றமும் சமுதாயத்தில் ஏற்படவில்லை.

நூற்றுக்கு நூறு இயக்க செயல்பாடுகள் என்பது ஒரு தனி நபரின் அல்லது ஒரு குழுவிற்குள் நடைபெறும் ஓட்டப்பந்தயமல்ல. இது ஒரு தொடர் ஓட்டம். சாதிக்க துடிப்பவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு மற்றவர்களுக்கும் அந்த எண்ணத்தை ஏற்படுத்தி அவர்களையும் தொடர்ந்து இதில் இணைப்பது என இதன் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இயக்கம் என்பது அலை போல. ஒரு நாளும் ஓயாது. இயக்கம் என்ற வார்த்தை நிஜமாக தொடர்ந்து இயங்குபவர்கள் தேவை. அதற்கான முயற்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் சுயமுன்னேற்ற பயிற்சியாளர்கள் குழுவை ஏற்படுத்துவது எனவும் அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சியளிப்பது எனவும் அவர்கள் மூலமாக சாதிக்கத் துடிப்பவர்களுக்கு சரியான வழிகாட்டுதலும் உற்சாகமும் தருவது எனவும் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

தங்கள் குழந்தைகளிடம் ஏற்பட்ட உற்சாகத்தை கண்ட பெற்றோர்கள் இந்த மகிழ்ச்சியை அனைத்து குழந்தைகளிடமும் ஏற்படுத்த வேண்டும். அதற்காக தாங்களும் இதில் இணைந்து செயல்படத் தயார் என்றனர். அன்றைய கூட்டத்தில் ஈர்க்கப்பட்டு இம்முயற்சியில் பயிற்சியாளராக தன்னை இணைத்துக் கொண்டவர்களுக்கு பயிற்சியாளர் பயிற்சியும் வழங்கப்பட்டது. 1 வருட தொடர் பயிற்சிக்கு பிறகு இவர்களுக்கு சிறந்த பயிற்சியாளர் அங்கீகாரம் வழங்கப்பட்டு சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் வழங்கப்படும்.

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

(20ம் தேதிக்குள் உங்களின் சிறந்த பதில்களை அனுப்புங்கள், வெளியாகும் பதில்களுக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், சி.டிக்கள் பரிசு.)

ஒரு மோசமான சினிமாகூட லட்சக்கணக்கானவர்களை உடனே சென்றடைகிறது.
ஆனால் ஒரு நல்ல புத்தகம் சில ஆயிரம் பேரை சென்றடைய அதிக காலம் ஆகிறதே. ஏன்?

  1. otakoothan

    இன்றைக்கு கவர்ச்சிகளையும் ஆடம்பரங்களையும் விரும்புகிறவர்களாக மனிதர்கள் மாறி விட்ட pinbu, மஞ்சள் பத்திரிகைகள் கூட அரிதாரம் பூசிக் கொண்டு சிகரங்கள் ஏறி விடுகின்றன…இன்றைக்கு இலட்சியங்களுக்காக யாரும் இலட்சங்களை இழக்க தயாராக இல்லை. வெறும் வார்த்தைகள் மட்டுமே..வாழ்வை மாற்றி விடாது என்பதை அவர்கள் புரிந்து வைதுளார்கள் . அனால் அதற்கான பயிற்சிகளை அவர்கள் முன் நின்று தரும் போது மட்டுமே அந்த வார்த்தைகளின் வலிமையை அவர்கள் உணர்கிறார்கள். தன்னம்பிக்கை கருத்துக்கள் கூட வெறும் ஏட்டளவில் இல்லாமல் payirchiyaaka தரும் போது மட்டுமே..அதற்கு பயன் vilayum.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *