டிசம்பர் 2, 1816
ரேசர் கருவியின் உரிமத்தை அதன் உரிமையாளர் கிங் ஜில்லட் பெற்ற நாள் இன்று. இதே நாளில் புதிதாக ஒரு தொழிற்சாலையும் தொடங்கப் பட்டது.
டிசம்பர் 3, 1879
தாமஸ் ஆல்வா எடிசன், மின்சார விளக்கின் முதல் செயல்முறை விளக்கத்தை ஜே.பி.மார்கன் மற்றும் வேன்டர்பில்ட் உறுப்பினர்கள் முன்னிலையில் செய்து காட்டினார். இதே நாளில் 31 ஆண்டுகள் கழித்து நியோன் விளக்கின் செயல்முறை விளக்கத்தை ஜார்ஜ் க்ளவுட் செய்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 5, 1901
வால்ட் டிஸ்னி சிக்காகோ நகரில் பிறந்தார். இளைஞராய் இருந்த போது வாராவாரம் நாவிதர் ஒருவருக்கு வரைந்து கொடுப்பார். அதற்கு அவர்க்கு கிடைத்த சன்மானம் 25 சென்ட் அல்லது ஒரு இலவச முடி திருத்தம்.
டிசம்பர் 7, 1944
நியூயார்க்கின், ஆர்.எச். மேசி நிறுவனம், சில்லறை விற்பனையில் ஒரே நாளில் 1 மில்லியன் டாலரை கடந்து சாதனை படைத்தது. அதே நிறுவனம் அடுத்தடுத்த ஆண்டுகளில் விற்பனையை பல மடங்குயர்த்தி அதன் சாதனையை அதுவே முறியடித்தது!!
டிசம்பர் 11, 1849
லண்டன் மற்றும் பாரீஸ் இடையே அமைக்கப்பட்ட ரயில் பாதையினை பிரபலப்படுத்தும் விதமாய், “மார்னிங் டைம்ஸ்” பத்திரிகையின் பிரதிகள் லண்டனில் காலை 7 மணிக்கு அனுப்பப்பட்டு பாரீசில் மதியம் 1.30 மணிக்கு பெறப்பட்டன.
டிசம்பர் 14, 1943
கார்ன் ஃபிளேக் எனும் உணவைக் கண்டறிந்த ஜான் ஹார்வே கேலாக் 91-ஆம் வயதில் இந்நாளில்தான் இறந்தார்.
டிசம்பர் 21, 1929
அமெரிக்காவின் பேலார் பல்கலைக்கழகம் (Baylor University) முதல் குரூப் இன்ஸ்யூரன்ஸ் (Group Insurance) திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது.
Leave a Reply